Published:Updated:

`கட்டடம் கட்ட ரூ.450; வினாத்தாளுக்கு ரூ.75..!’-சர்ச்சையில் சிக்கிய தேனி அரசுப்பள்ளி

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் பதிவேட்டில் கைரேகையைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடுவதாகவும் இதற்குப் பள்ளி தலைமையாசியர் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Theni Collector Office
Theni Collector Office

அரசுப் பள்ளியில் கட்டடம் கட்ட நிதி, வினாத்தாள் கட்டணம், புத்தகக் கட்டணம் என வசூல் வேட்டையில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Theni Collector Office
Theni Collector Office

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது ஆசாரிப்பட்டி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிகளிடம் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, விசாரணையில் இறங்கிய இந்திய மாணவர் சங்க மாவட்டக் குழு, நேரடியாக விசாரணை செய்தது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்ததன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவைச் சந்தித்து புகார் மனுவைக் கொடுத்தனர்.

Theni Collector Pallavi Baldev
Theni Collector Pallavi Baldev

அரசுப் பள்ளியின் வசூல் குறித்து நம்மிடம் பேசிய இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் நாகராஜ், ``ஆசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எந்த அரசாணையும் இன்றி, மாணவ மாணவிகளிடம், கட்டடம் கட்ட நிதியாக தலா 450 ரூபாயும் வினாத்தாள் கட்டணமாக தலா 75 ரூபாயும் புத்தகக் கட்டணமாக தலா 10 ரூபாயும் வசூல் செய்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமான பள்ளி தலைமையாசியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் பதிவேட்டில் கைரேகையைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடுவதாகவும் இதற்குப் பள்ளி தலைமையாசியர் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, பயோமெட்ரிக் பதிவேட்டையும் பள்ளி ஆசிரியர்களின் செல்போன் சிக்னல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேலும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. அதையும் சரி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அவரும், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்” என்றார்.

`ஆபாச வீடியோ; பாலியல் சீண்டல்!'- நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியர் செயலால் கொதித்த பெற்றோர்

அரசுப் பள்ளி மீதான புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவியிடம் பேசினோம். ``புகார் தொடர்பாக, அதிகாரிகளை அனுப்பி பள்ளியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்’ என்றதோடு முடித்துக் கொண்டார்.