Published:Updated:

``எங்களைவிட்டுப் போகாதீங்க சார்..!" - ஆசிரியரைக் கண்ணீருடன் சுற்றிவளைத்த மாணவர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்

பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் போகவிடாமல் சுற்றிவளைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``எங்களைவிட்டுப் போகாதீங்க சார்..!" - ஆசிரியரைக் கண்ணீருடன் சுற்றிவளைத்த மாணவர்கள்

பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் போகவிடாமல் சுற்றிவளைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அரசுப்பள்ளி ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் இயங்கிவருகிறது அரசு உயர்நிலைப்பள்ளி. அங்கு ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்துவந்தவர் ஆனந்த கண்ணன். அந்தப் பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களின் குடும்பச் சூழலையும், கிராமத்துப் பின்னணியையும் உணர்ந்துகொண்ட ஆசிரியர் ஆனந்த கண்ணன், அவர்களுடன் அன்பாகப் பழகியிருக்கிறார். மேலும், தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே ஆங்கிலத்தில் பேச முடியும், எழுத முடியும் என்ற நிலையை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கல்வி முறையில் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

மாணவ, மாணவியருடன் ஆசிரியர் ஆனந்த கண்னன்
மாணவ, மாணவியருடன் ஆசிரியர் ஆனந்த கண்னன்

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தயக்கம் காட்டிய மாணவர்கள் ஆசிரியர் ஆனந்த மோகன் கொடுத்த தன்னம்பிக்கையில், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தொடங்கினர். இந்நிலையில் ஆனந்த கண்ணனுக்கு நேற்று முன்தினம் பணி மாறுதல் ஆணை வந்தது. அதனால் அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்வதற்கு அவர் தயாரானார். அதைத் தெரிந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ``எங்களைவிட்டுப் போகாதீங்க சார்!” என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். ஆனந்த கண்ணன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மாணவர்கள் அவரை விடவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவலறிந்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ``ஆசிரியர் ஆனந்த கண்ணன் பணியிட மாறுதலில் செல்கிறார். அரசின் உத்தரவைத் தடுக்க முடியாது. தவிர உங்களைப்போல மற்ற பள்ளியின் மாணவர்களும் அவரால் பயன்பெற வேண்டும். அதனால் அவர் போவதற்கு அனுமதியுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல ஆசிரியர் ஆனந்த கண்ணனும் அவர்களுக்குப் பொறுமையாக எடுத்துக் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் ஆசிரியர் ஆனந்த கண்ணன் கற்றுக்கொடுத்த ஆங்கிலப் பாடலைப் பாடி கண்ணீருடன் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பள்ளியை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே நெகிழவைத்திருக்கிறது. வடதொரசலூர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2017 முதல் பணிபுரிந்துவரும் ஆனந்த கண்ணன் தமிழக அரசின் ’கனவு ஆசிரியர் விருது’ மற்றும் ’டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது’ போன்ற விருதுகளை வாங்கியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism