Published:Updated:

"பொறியியல் பொது கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது; காரணம் இதுதான்" - அமைச்சர் பொன்முடி விளக்கம்

அமைச்சர் பொன்முடி ( தே.சிலம்பரசன் )

பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை முதல் பொது கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

"பொறியியல் பொது கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது; காரணம் இதுதான்" - அமைச்சர் பொன்முடி விளக்கம்

பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை முதல் பொது கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அமைச்சர் பொன்முடி ( தே.சிலம்பரசன் )

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குவதாக இருந்தது. இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளிவராததால், அந்தத் தேர்வு முடிவைப் பொறுத்தே இந்த சேர்க்கை நிர்ணயிக்கப்படுகின்ற சூழ்நிலை இருக்கும் காரணத்தால்; நாளை நடைபெற இருந்த பொறியியல் பொது கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும்.

பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு
மாதிரி புகைப்படம்

இது, கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொறுத்து இருக்கின்ற காரணத்தால் இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. முன்பு கூட மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் விண்ணப்பிக்கும் கால அவகாசம் கூடுதலாக 5 நாட்கள் வழங்கப்பட்டது. இப்போதும் நீட் தேர்வு முடிவுகள் 21-ம் தேதியே வந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால், இன்னும் வராமல் காலம் தாழ்த்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டால், பொறியியல் படிப்பில் சேரும் பல மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சென்றுவிடுவார்கள். அதனால்தான் சென்ற ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்கள் காலியாக இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான், இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு 25-ம் தேதி நடைபெறும் என கூறியிருந்தோம்.

தேர்வு முடிவு
தேர்வு முடிவு
மாதிரி படம்

ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால், அதன் முடிவுகள் வரும் வரை பொறியியல் படிப்பு கலந்தாய்வை தள்ளி வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், இரண்டு இடங்களிலும் பணத்தை கட்டிவிட்டு மாணவர்கள் தத்தளிக்கும் மனப்பான்மை ஏற்படக்கூடாது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து இரண்டு நாட்களுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்படும். பின்னர், அனைத்து தேதிகளும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்" என்றார்.