Published:Updated:

பள்ளிகளில் நம்பிக்கை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்! #MyVikatan

பள்ளி மாணவர்கள்

தன்னம்பிக்கை கதைகளை, நிகழ்கால சாதனையாளர்களைப் பற்றி கலந்துரையாடும் வகுப்பாக அது இருந்தால், மாணவர்களுக்கு தோல்வி பயம் குறைந்து தற்கொலை எண்ணம் வராமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளில் நம்பிக்கை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்! #MyVikatan

தன்னம்பிக்கை கதைகளை, நிகழ்கால சாதனையாளர்களைப் பற்றி கலந்துரையாடும் வகுப்பாக அது இருந்தால், மாணவர்களுக்கு தோல்வி பயம் குறைந்து தற்கொலை எண்ணம் வராமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

Published:Updated:
பள்ளி மாணவர்கள்
பாடப் புத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்த, தடைகளைத் தகர்த்த அனுபவங்களை இந்த முன்னோடிகள் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோக்களை நம்பிக்கை வகுப்பில் இடம்பெற செய்யலாம்.

சில சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சில நாட்களுக்கு முன் பள்ளி, மாணவ மாணவிகளின் தற்கொலைகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்தக் காட்சிகளைப் பார்த்த பிறகு பள்ளி மாணவ மாணவிகளின் தற்கொலை எண்ணிக்கையில் தமிழ் நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது நினைவுக்கு வந்தது. தற்கொலைகளை குறைக்க நாம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

நம்பிக்கை வகுப்பு (HOPE Class)

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வாரத்தில் ஒருநாள் HOPE Class என்கிற நம்பிக்கை வகுப்பைத் தொடங்கலாம். தன்னம்பிக்கை கதைகளை, நிகழ்கால சாதனையாளர்களைப் பற்றி கலந்துரையாடும் வகுப்பாக அது இருந்தால், மாணவர்களுக்கு தோல்வி பயம் குறைந்து தற்கொலை எண்ணம் வராமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

நன்றாகப் படித்து, பதவி பெற்று அரசின் செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத நபர்களாக, எல்லோருக்கும் சிறந்த முன்மாதிரிகளாக விளங்கும் அதிகாரிகளுடைய ஊக்கப் பேச்சு வீடியோக்கள் யூடியூப் சேனல்களில் கிடைக்கின்றன. அந்த வீடியோக்களை நம்பிக்கை வகுப்பில் ஒளிபரப்பலாம்.

எழுத்தாளர்களும் இசை-நடனக் கலைஞர்களும் விளையாட்டு வீரர்களும் விஞ்ஞானிகளும் இன்னபிற நிபுணர்களும் நம் நிகழ்கால முன்னோடிகள், நம் சமகாலத்து சாதனையாளர்கள். அவர்களின் பெயர்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பாடப் புத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்த, தடைகளைத் தகர்த்த அனுபவங்களை இந்த முன்னோடிகள் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோக்களை நம்பிக்கை வகுப்பில் இடம்பெற செய்யலாம். அதன் மூலம், பாடப் புத்தகங்களில் பெயர் வரும் அளவுக்கு, பத்திரிக்கைகளில் இடம் பெறும் அளவுக்கு நாம் சாதிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்க முடியும்.

பள்ளி
பள்ளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Children of heaven, Pursuit of happiness, Vikram adityan, M.S.Dhoni - The untold story போன்ற தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய திரைப்படங்களையும் நம்பிக்கை வகுப்பில் திரையிடலாம்.

மதுரையை சேர்ந்த நந்தினி முரளி என்பவர் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையில் ’ஸ்பீக்’ என்ற அமைப்பை தொடங்கி தற்கொலைகளை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். இவரைப் போன்றவர்களின் செயல்பாடுகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு கருத்துகளை, ஆலோசனைகளை வீடியோக்களாக பதிவு செய்து அவற்றையும் வகுப்புகளில் ஒளிபரப்பலாம்.

Children of heaven, Pursuit of happiness, Vikram adityan, M.S.Dhoni - The untold story போன்ற தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய திரைப்படங்களையும் நம்பிக்கை வகுப்பில் திரையிடலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் சில நடவடிக்கைகள்:

1. தேர்வில் தோல்வி அடையும் மாணவ மாணவிகளுக்கு இலவச டுடோரியல் வசதி செய்து தர வேண்டும்.

2. தற்கொலை தடுப்பு பிரிவு இலவச உதவி எண்ணான 104 என்ற எண்ணை அனைத்து பள்ளிப்பாடப் புத்தகங்களிலும் இடம்பெற செய்யலாம்.

3. தேர்வு காலங்களில் பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை கொண்டு தற்கொலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

4. மாணவ மாணவியர் தற்கொலைகளுக்கு ஒருவிதத்தில் பெற்றோர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பெற்றோர்கள் பயந்துபோய் பிள்ளைகளின் ’தேர்வில் தோல்வி’ செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அவமானமாக நினைக்கிறார்கள். ஆதலால் மாணவ மாணவிகளை விட பெற்றோர்தாம் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டுமென தெரியாமல் தடுமாறிவிடுகிறார்கள். தேர்வு ரிசல்ட் வெளியிடுவதற்கு முன்பு தோல்வி அடைந்த மாணவ மாணவியர் பட்டியலை தனியாக தயார்செய்து, தோல்வியை எப்படி கடந்து வர உதவுவது என்பது மாதிரியான அரசு தரப்பிலான விளக்கங்களை 104 சேவை அல்லது மாணவ மாணவிகள் படித்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்களுக்கு விளக்கிவிட்டு பிறகு தேர்வு முடிவுகளை வெளியிட்டால் தற்கொலைகள் தடுக்கப்படும்.

’அரசு கொடுக்கும் இழப்பீடுக்கு ஆசைப்பட்டோ அரசு வேலைக்கு ஆசைப்பட்டோ தற்கொலை செய்துகொள்வதில்லை’
தற்கொலை
தற்கொலை

தற்கொலைகளும் இழப்பீடும்

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா, பிரதீபா, விக்னேஷ், தனுஷ் ஆகிய நான்கு மாணவரின் குடும்பத்திற்கும் இழப்பீடு தொகைகள் வழங்கப்பட்டு அனிதா, விக்னேஷ் ஆகியோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. தனுஷ் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படி தற்கொலைகளுக்கு இழப்பீடும், அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதும் சரியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் தற்கொலைக்கு இழப்பீடும் அரசு வேலையும் வழங்குவது அரசே தற்கொலைகளை ஊக்குவிப்பது போல உள்ளது என்று வருத்தம் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை பலர் விமர்சித்து இருந்தார்கள். ’அரசு கொடுக்கும் இழப்பீடுக்கு ஆசைப்பட்டோ அரசு வேலைக்கு ஆசைப்பட்டோ தற்கொலை செய்துகொள்வதில்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூலித்தொழிலாளி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பத்தாம் வகுப்பில் 90% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டவர் என்றால் அந்தக் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையும் அரசு வேலையும் வழங்குவது சரி தவறு என்பதை விட ஏதோ ஒரு விதத்தில் உதவிக்கரம் நீட்டுவது அவசியமாகிறது. அவ்வளவு மதிப்பெண் பெற்ற தங்கள் பிள்ளைகளை நினைத்து எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள் அந்த பெற்றோர்கள்? அவர்களின் கனவு நொறுங்கும் வகையில் சூழல் அமைந்தால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றி பேசும்போது 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவிகள் பற்றி பேசாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நியாயமான கேள்வி. நீட் தேர்வை காட்டிலும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொள்பவர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகள்தாம் அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கு காரணம் மன அழுத்தம், வறுமையான குடும்ப பின்னணி, கல்வியில் சமத்துவமின்மை போன்றவை மட்டுமே.

தற்கொலை என்பது உங்கள் பெற்றோருக்கும் உங்களை விரும்புவோருக்கும் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். ஆதலால் பிள்ளைகளின் தற்கொலையால் மனம் நொந்து போயுள்ள கூலித்தொழிலாளிகள் குடும்பத்துக்கு அரசு உதவிக்கரம் நீட்டுவது நியாயமானதே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism