UPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்? #DoubtOfCommonMan

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களை வரிசைப்படுத்துகிறார், வருமான வரித்துறை அதிகாரி பூ.கொ.சரவணன் I.R.S.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், பொன் அழகர் என்ற வாசகர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். "நான், முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதவிருக்கிறேன். எந்தெந்த புத்தகங்கள் படித்தால் அந்தத் தேர்வுக்கு உதவும் என்று கூற முடியுமா?"' என்பதே அவரின் கேள்வி!
போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் பூ.கொ.சரவணன் ஐ.ஆர்.எஸ் முன் இந்தக் கேள்வியை வைத்தோம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் உங்களுக்கு என் வாழ்த்துகள். பொதுவாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அடிப்படையான பாடத்திட்டம், இந்திய வரலாறு, சுற்றுச்சூழல், அரசியல் அமைப்புச்சட்டம், ஆட்சி நிர்வாகம், புவியியல், கலாசாரம், அறிவியல் தொழில்நுட்பம், உள்நாட்டுப் பாதுகாப்பு, அயலுறவு ஆகியவை உள்ளடக்கியவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இவை தவிர, தேர்வுக்கு இன்னும் உங்களை மேம்பத்திக்கொள்ள, படிக்கவேண்டிய நூல்கள்குறித்துப் பகிர்ந்துகொள்கிறேன்.

சங்கர் கணேஷ் கருப்பையா எழுதிய 'இந்தியப் பொருளாதாரம் - முக்கிய கருத்துகள்'.

ராமச்சந்திர குஹா எழுதிய - 'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு...' இந்த நூல் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு பாடநூல் கழகத்தில், முன்பு வெளியிடப்பட்ட 11-ம் வகுப்பு வரலாறு புத்தகம்.
தமிழ்கல்வி.இன் (tamilkalvi.in) என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் எழுதுவதற்கு உதவும் பல நூல்கள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கின்றன. குறிப்பாக, வரலாறு, புவியியல், பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவில் பல மின்னூல்கள் எளிதில் தேடும் விதத்தில் கிடைக்கின்றன.
சுபாஷ் கஷ்யப் எழுதிய 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' - என்பிடி வெளியீடு.

சுபாஷ் கஷ்யப் எழுதிய 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' என்ற நூலின் ஆங்கிலப் பிரதி. Subhash C. Kashyap - Our Constitution

Lakshmi Kanth - Indian polity

NCERT-யின் (National Council of Educational Research and Training) வரையறுத்திருக்கும் 6 முதல் 10 வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாட நூல்கள்.

இவையெல்லாம் எந்தெந்தப் பிரிவுகளில் படிக்கலாம் என்பதற்கான ஒரு வழிகாட்டலே. இவை தொடர்பான எந்த நூலும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களுக்கு உதவும். தினமும் செய்தித்தாள்கள் படிப்பது மிக முக்கியமான பழக்கமாகக் கொள்ளுங்கள். அவ்வப்போது நடக்கும் நடப்பு செய்திகளை விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால், இவற்றிலிருந்து நிறைய கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், வாழ்த்துகள்.
குடிமைப் பணித் தேர்வுகுறித்து பூ.கொ.சரவணன் ஐ.ஆர்.எஸ் அளித்த விரிவான நேர்காணலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!