Published:Updated:

``ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் ஆக யாருடைய தயவும் தேவையில்லை!’’ - ஜவஹர் ஐ.ஏ.எஸ்ஸின் வழிகாட்டல்

Representational Image
Representational Image

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எஸ்.எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொடுத்த சின்ன மெசேஜ்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால், அனைவருக்குமே சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம், விடா முயற்சி இவை அனைத்தும் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவை செயல் வடிவம் கொடுக்கும் வகையில், விகடன் பிரசுரம் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, UPSC, TNPSC தேர்வுகளில் வெல்வது ஏப்படி? என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

இலவச பயிற்சி முகாம்
இலவச பயிற்சி முகாம்

முன்பதிவுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2M62rQw

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்க உள்ளனர். இந்நிகழ்வு, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 29-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை (10 மணி முதல் மதியம் 2 மணி வரை) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஐ.ஏ.எஸ் கனவுகளை சுமந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வு பற்றிய புரிதலைக் கொடுக்கும்.

``UPSC, TNPSC தேர்வுகளில் வெல்வது ஏப்படி ?’’ கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார். அது மட்டுமல்ல, போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர்.

Representational Image
Representational Image

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 9444227273 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எஸ்.எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொடுத்த சின்ன மெசேஜ்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``போட்டித் தேர்வுகள் எழுத ஒரு டிகிரி இருந்தால் போதும். அரசு வேலை என்பது நிரந்தரமானது. அதன்மூலமாக மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது. உதாரணமாக ஒரு முனிசிபல் கமிஷனராக இருந்தால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியும். சப் ரெஜிஸ்டரரானால் ஏழை மக்களை  இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்றலாம்.

எஸ்.எஸ் .ஜவஹர் ஐ.ஏ.எஸ்
எஸ்.எஸ் .ஜவஹர் ஐ.ஏ.எஸ்

நான் மதுரையில் கலெக்டராக இருந்தேன். விருதுநகரிலும் இருந்தேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரச்னைகள் வேறுபடும். வெவ்வேறு சவால்களைச் சந்திந்தேன். பல்வேறு திட்டங்களை விரிவாக அலசி செயல்படுத்தினேன். அந்தத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் போய்ச் சேராது. எனவே, அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பெரிய சவாலாக இருந்தது. நான் மதுரையில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன். இரண்டு முறை சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பெற்றேன். நான் பணிக்கு வருவதற்கு முன் இந்த மாவட்டத்தில் 25,000 பேர் முதியோர் பென்ஷன் வாங்கிக்கொண்டிருந்தனர். நான் பணிநிறைவு பெறும்போது 68,000 பேர் வாங்கிக் கொண்டிருந்தனர். இதுதான் என் வாழ்நாள் சாதனை. முதியோர் பென்ஷன் குறித்து விழிப்புணர்வு இல்லாத கிராமங்களுக்கு நேரில் சென்று நானே அவர்களுக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தேன்.

ஒவ்வொரு நாளும் பணிக்குச் செல்வது மனநிறைவைக் கொடுத்தது. அதேபோன்று படிப்பில் நூற்றுக்கு நூறு என்று ஒரு திட்டம் கொண்டு வந்தேன். அந்தத் திட்டத்தால் 10, 12வது வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 18-வது இடத்தில் இருந்த மதுரை முன்னேறி இன்று 3-வது, நான்காவது இடத்தில் உள்ளது. இதுபோன்று பல்வேறு சவால்களும் சாதனைகளும் இந்தத் துறையில் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. 

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் நேர்மையான, துடிப்பான இளம் தலைமுறையினரின் தேவை அதிகமாக உள்ளது.

Representational Image
Representational Image

அரசுத் துறைகளில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு மொழிப்பற்றும் திறமையும் இருக்க வேண்டும். மொழி ஆளுமை முக்கியம். நம் கருத்தை மக்களுக்குப் பரிமாறுவதில் சிக்கல் இருக்கக் கூடாது. மக்கள் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது அந்த உரையாடலில் இடறல் வரக் கூடாது. ஒரு கடிதமோ அறிக்கையோ வெளியிடும்போது தெளிவு இருத்தல் வேண்டும். எனவே திறமையும், மொழி ஆளுமையும் இருப்பவர்களுக்கு போட்டித் தேர்வுகள் கைகொடுக்கும்.

நீதிபதி ஆக வேண்டும் என்றால் அவர்களுக்குக் கண்டிப்பாக  god fathers இருக்க வேண்டும். ஒரு வக்கீலாக வேண்டும் என்றால் ஏற்கெனவே வக்கீலாக இருப்பவர்களிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். ஆனால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் ஆக யாருடைய தயவும் தேவையில்லை. கடுமையான உழைப்பும், திறமையும் மட்டும் இருந்தால் போதும். 

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது வாயிலாகச் சமுதாயத்தில் அந்தஸ்து, நியாயமான சம்பளம், வேலை பாதுகாப்பு, மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு ஆகியவற்றைப் பெறமுடியும்.

Representational Image
Representational Image

கிராமப்புற மாணவர்கள் இடையே யு.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது. யு.பி.எஸ்.சி தேர்வுகளைத் தமிழில் கூட எழுதலாம் என்னும் தகவல் இன்றுவரை நிறைய மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. ஆங்கில அறிவு என்பது அறிவுக்கு இணையான ஒன்று அல்ல. அது ஒரு மொழி அவ்வளவே. தமிழில் இன்னும் நிறைய புத்தகங்கள் வரவில்லை. சீக்கிரமே வந்துவிடும். 

பள்ளி, கல்லூரிகள் போட்டித் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் குறித்து கிராமப்புறங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தகவல் போய்ச் சேர வேண்டும். இந்தப் பொறுப்பை ஊடக நிறுவனங்கள் கையில் எடுக்க வேண்டும். இந்தப் பணியை விகடன் சிறப்பாகச் செய்து வருகிறது’’ என்றார்.

முன்பதிவுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2M62rQw

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 9444227273 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு