Published:Updated:

`யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் தயார் செய்வது இனி ஈசி!’ – கல்வியாளர் அட்வைஸ்

Representational Image
Representational Image

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் டாக்டர் சங்கர சரவணன் கொடுத்த சின்ன மெசேஜ்...

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால், அனைவருக்குமே சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம், விடா முயற்சி இவை அனைத்தும் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில், ஆனந்த விகடன் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடத்த உள்ளன.

Representational Image
Representational Image

ஐ.ஏ.எஸ், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்க உள்ளனர். இந்நிகழ்வு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் 2020, மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9.00 - 2.00 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஐ.ஏ.எஸ் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்குப் புதிய வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வு பற்றிய புரிந்துணர்வைக்க் கொடுக்கும்.

IAS, TNPSC தேர்வுகள் பற்றிய இந்தக் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர். ரவி ஐ.பி.எஸ் அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார். அத்துடன், போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர். சங்கர சரவணன், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர்- இயக்குநர் சிவராஜவேல் ஆகியோர் ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர்.

`யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் தயார் செய்வது இனி ஈசி!’ – கல்வியாளர் அட்வைஸ்

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால்போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன் கொடுத்த சின்ன மெசேஜ்...

டாக்டர் சங்கர சரவணன்
டாக்டர் சங்கர சரவணன்

``யு.பி.எஸ், டி.என்.பி.எஸ்.சி ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே சமயத்தில் தயாராவது எப்படி என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். அது பற்றிய சந்தேகங்கள், நுணுக்கங்கள் குறித்து மார்ச் 1 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனை முகாமில் விரிவாகப் பேசவுள்ளோம். அண்மையில் டி.என்.பி.எஸ்.சி பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுகுறித்தும் மாணவர்களுக்கு விளக்கவுரை வழங்க உள்ளோம்.

முன்பு டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு நிறைய இடைவெளி இருந்தது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அந்த இடைவெளி தற்போது குறைந்துள்ளது. எனவே இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே சமயத்தில் தயாராவது சுலபம். சரியான வழிகாட்டுதல் மட்டும் இருந்தால் போதும். அந்த வழிகாட்டுதல்களைத்தான், நாங்கள் வழங்க உள்ளோம். பொதுவாக, `யு.பி.எஸ்.சி போன்ற தேர்வுகளை எழுத எழுதத்தான், நம் தவறுகளை நாமே சரிசெய்துகொண்டு வெற்றிபெற முடியும்’ என்று சொல்வார்கள். ஆனால் அது அதிக நேரம் எடுக்கும். தேர்வுகள் எழுத எழுத அனுபவம் கிடைப்பது உண்மைதான். ஆனால், ஒரே முயற்சியில் தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகளும் உள்ளன.

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாலே attempt-களைக் குறைக்க முடியும். நான் 15 வருடமாக இந்தத் துறையில் இருக்கிறேன். எனவே, மாணவர்கள் தேர்வின்போதும் தேர்வுக்குத் தயாராகும்போதும் எந்தந்த மாதிரியான தவறுகள் செய்கின்றனர் என்பதை ஓரளவுக்கு பகுப்பாய்வு செய்திருக்கிறேன். அதுதொடர்பாக இந்த ஆலோசனை முகாமில் பல்வேறு விஷயங்களை விவரிக்க உள்ளேன். அதுமட்டுமன்றி கிராமப்புற மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கச் சிறப்பு செஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள், தயார் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்’’ என்றார்.

மார்ச் 1ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சியின் ஆன்லைன் முன்பதிவுக்கான கூகுள் படிவத்தின் லிங்க்... https://forms.gle/1KkpBC21eg7fTrKJ9
அடுத்த கட்டுரைக்கு