Published:Updated:

`ஒரு ஐ.ஐ.டி கூட இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை!' - மத்திய அமைச்சரைச் சந்தித்த மாணவர் குழு

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006 சரிவரப் பின்பற்றப்படுவதில்லை என்கிற புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி. தீப்சிதா தர்
ஐ.ஐ.டி. தீப்சிதா தர்

மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் இடஒதுக்கீட்டுக்கான மசோதா கடந்த ஜூலை 2019-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின்படி ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள், கல்வியறிவில் பின்தங்கிய பிரிவினர், பொருளாதார அளவீட்டில் பின் தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதுவரையிலான இடஒதுக்கீடு முறை துறைவாரியாக இருந்த சூழலில், இனி தனித்தனிக் கல்வி நிறுவனவாரியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

இந்தப் புதிய சட்டம், குறிப்பிட்ட சில தேசிய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்கள் தவிர்த்து அனைத்துக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே அண்மையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலைச் சந்தித்த அனைந்திந்திய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் தீப்ஷிதா தர், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006 சரிவரப் பின்பற்றப்படுவதில்லை என்கிற புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

`ஒரு ரூபாயில் ஹீமோகுளோபின் டெஸ்ட்!' - புதிய கருவியைக் கண்டுபிடித்த ஐஐடி குழு

இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கான சட்ட மசோதாவை அண்மையில் அரசு நிறைவேற்றியது. 2006-ல் இதே மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைகளுக்கான இடஒதுக்கீடுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டபோது ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு முறையே 15, 7.5 மற்றும் 27 சதவிகிதம் என வரையறுத்தது.

இந்தியாவில் இருக்கும் அத்தனை ஐ.ஐ.டி-க்களும் தங்களது மாணவர் சேர்க்கை குறித்த ஆண்டு விவரங்களை வெளியிட்டுள்ளன. அவற்றில் ஒரு ஐ.ஐ.டி கூட இடஒதுக்கீட்டு முறையைச் சரியாகப் பின்பற்றவில்லை.
அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு

ஆனால், பட்டமேற்படிப்பு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கான சேர்க்கையில் இந்த இடஒதுக்கீட்டு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக இந்தியாவில் இருக்கும் அத்தனை ஐ.ஐ.டி.க்களும் தங்களது மாணவர் சேர்க்கை குறித்த ஆண்டு விவரங்களை வெளியிட்டுள்ளன. அவற்றில் ஒரு ஐ.ஐ.டி. கூட இடஒதுக்கீட்டு முறையைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுவதற்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாணவர் சேர்க்கை இடஒதுக்கீட்டை சரிவரச் செயல்படுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது.