Published:Updated:

"பிற்படுத்தப்பட்ட சாதியினரைக் கண்ணியத்தோடு பணியாற்ற விடுங்கள்!"- பிரதமருக்கு ஐஐடி பேராசிரியர் கடிதம்

"என்னுடைய வேலை மற்றும் உடல்நலம் இதனால் பாதிக்கப்படுகிறது. என்னுடைய உடல்நலன் கருதி நான் விலகுகிறேன்." - பிரதமருக்கு ஐஐடி பேராசிரியர் விபின் பி வீடில் கடிதம்

"பிற்படுத்தப்பட்ட சாதியினரைக் கண்ணியத்தோடு பணியாற்ற விடுங்கள்!"- பிரதமருக்கு ஐஐடி பேராசிரியர் கடிதம்

"என்னுடைய வேலை மற்றும் உடல்நலம் இதனால் பாதிக்கப்படுகிறது. என்னுடைய உடல்நலன் கருதி நான் விலகுகிறேன்." - பிரதமருக்கு ஐஐடி பேராசிரியர் விபின் பி வீடில் கடிதம்

Published:Updated:

பேராசிரியர் விபின் பி வீடில், சென்னை ஐஐடியில் சாதிய ரீதியில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக 2021-ல் குற்றச்சாட்டு எழுப்பினார். இதனை விசாரித்த ஐஐடி குழுவின் தீர்வு தனக்கு திருப்தியளிக்கவில்லையென்றும் இதன் மீதான விசாரணை பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தால் தனிசுதந்திரத்தோடு நடத்தப்பட்ட வேண்டும் என்று பிரதமருக்கும் தேசிய ஆணையத்துக்கும் வீடில் கடிதம் எழுதியுள்ளார். இந்த விசாரணை நடைபெறவில்லையெனில் தான் உண்ணாவிரதம் இருக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவி பேராசிரியர் விபின் பி வீடில்
உதவி பேராசிரியர் விபின் பி வீடில்

"என்னுடைய வேலை மற்றும் உடல்நலம் இதனால் பாதிக்கப்படுகிறது. என்னுடைய உடல்நலன் கருதி நான் விலகுகிறேன். என்னை சாதியரீதியாக துன்புறுத்தியவர்கள் தங்கள் தவற்றை உணர செய்ய, நான் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தை அணுகியுள்ளேன்" எனத் தன்னுடைய கடிதத்ததில் தெரிவித்திருக்கிறார் வீடில்.

கடந்த வருடத்தின் ஜூலை மாதம் வீடில் நான்கு பேராசிரியர்கள் மீது 'சாதியரீதியில் பாரபட்சம்' பார்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பினார். அவருடைய முதலாம் ஆண்டு பணியில், மாணவர்களுக்கு எலெக்ட்டிவ் பாடங்களை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் அதே நேரத்தில் வேறு ஒரு உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் அனுமதிக்கப்பட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டை விசாரித்த கமிட்டி, தவறுதலான புரிதல் ஏற்பட்டிருக்கிறது, வீடில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என மற்றவர்களுக்கு தெரிந்திருக்க முகாந்திரம் இல்லை எனத் தீர்வு அளித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இந்த விசாரணை மீது அதிருப்தியுற்ற வீடில் தற்போது பிரதமருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். "சாதிய பாகுபாடு பார்க்கும் பேராசிரியர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து வரும் யாரையும் நிம்மதியாக வாழவோ கண்ணியத்தோடு பணியாற்றவோ அனுமதிப்பதில்லை என்பதற்காகவே நான் பணி விலகுகிறேன். இங்கு இருக்கும் புகார் தீர்க்கும் வழிமுறைகளில் சோர்ந்து போன பிறகுதான் நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்" என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வீடில். சென்னை ஐஐடி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்பே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism