Published:Updated:

``அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறையா?!" - அரசுக்கு எதிராகக் கொதித்த ஜார்க்கண்ட் பாஜக

ஜார்கண்ட் சட்டமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் பாஜக-வினர் ( ட்விட்டர் )

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி இஸ்லாமியமயமாக்கப்படுவதாகக் கூறி மாநில சட்டப்பேரவைக்கு வெளியே பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

``அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறையா?!" - அரசுக்கு எதிராகக் கொதித்த ஜார்க்கண்ட் பாஜக

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி இஸ்லாமியமயமாக்கப்படுவதாகக் கூறி மாநில சட்டப்பேரவைக்கு வெளியே பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
ஜார்கண்ட் சட்டமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் பாஜக-வினர் ( ட்விட்டர் )

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், வாராந்தர விடுமுறை தினத்தை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமையாக மாற்றியதால், கல்வியை இஸ்லாமியமயமாக்குவதில் அரசு ஈடுபட்டுருப்பதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக பா.ஜ.க எம்.எல்.ஏ பி.நாராயண் செய்தியாளர்களிடம், "மாநிலத்தில் இஸ்லாமியமயமாக்கல் நடக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வார விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமையாக அரசு மாற்றியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர். எனவே, கல்வியை இஸ்லாமியமயமாக்கும் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவி விலக வேண்டும். மாநிலத்தில் கல்வியில் உருதுமயமாக்கலையும் நிறுத்த வேண்டும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ பி.நாராயண்
பா.ஜ.க எம்.எல்.ஏ பி.நாராயண்
ட்விட்டர்

கடந்த மாதம், ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவில் உள்ள 33 அரசுப் பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக அறிவித்தன. தும்கா மாவட்டக் கல்வி கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தாஸ், "33 பள்ளிகளின் தாலுகா கல்வி அலுவலருக்கு இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்குமாறு அறிவுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறேன். அனைத்துப் பள்ளிகளின் பெயர்களிலும் உருது உள்ளது.

இந்தக் கல்வி நிறுவனங்களுடன் உருது எவ்வாறு இணைக்கப்பட்டது மற்றும் எந்த நிபந்தனையின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக அளிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று துறையிலிருந்து எந்த உத்தரவும் வழங்கவில்லை. அது தொடர்பான அறிக்கை கிடைத்ததும், நாங்கள் விசாரணையைத் தொடங்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!