ஏர் இந்தியா, எஸ்.பி.ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!- விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

ஏர் இந்தியா, எஸ்.பி.ஐ, இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஏர் இந்தியா (Air India) - பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணி
ஏர் இந்தியாவின் டெல்லி அலுவலகத்தில், 60 பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் நிலையான விதிமுறையுடன்கூடிய ஒப்பந்த அடிப்படையில் (On Fixed Contract Basis) நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் ஒதுக்கீடு
பொதுப்பிரிவு - 22
எஸ்சி - 9 எஸ்டி - 7
ஓபிசி - 14
ஈடபிள்யூஎஸ் – 8.
வயது வரம்பு (1-8-2019 அன்று)
பொதுப்பிரிவினர் 28
எஸ்சி, எஸ்டி - 33
ஓபிசி - 31-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பி.இ / பி.டெக் (கணினிப் பொறியியல்) அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழகப் பட்டப்படிப்புடன், 70 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களுடன் GATE-2019 தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது கணினியியல் பாடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பில் (எம்சிஏ / எம்.எஸ்சி) தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் - 18-9-2019
தேர்வுமுறை: விண்ணப்பித்தவர்களில், செப்டம்பர் / அக்டோபர் 2019-ல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு, இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பணிக்கான ஆணை வழங்கப்படும். ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணியில், பயிற்சிக்கான காலத்தை ஏர் இந்தியா நிறுவனமே முடிவுசெய்யும்.
பயிற்சியின்போது, மாதந்தோறும் ரூ.25,000/- உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை சிறப்பாக நிறைவுசெய்தவருக்கு நிலையான விதிமுறையுடன்கூடிய ஒப்பந்த அடிப்படையிலான உதவிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் அளிக்கப்பட்டு, மாதம் ரூ.45,000/- அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், ரூ.50,000/- வங்கி ஈட்டுறுதி (Bank Guarantee) அளிக்கவேண்டியிருக்கும்.
மேலும் தகவல்களுக்கு: https://ota.airindia.in/erecruitmenttraineecontroller/index.aspx எனும் இணையதளத்தில் பார்க்கவும்.
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் - வேலை பழகுநர் (Apprenticeship)
ராஜஸ்தான், கேத்ரி நகரில் அமைந்திருக்கும் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆலையில், இந்திய அரசின் வேலை பழகுநர் சட்டம் 1961-ன் கீழ், ஒரு வருடகால அளவிலான ஃபிட்டர், டர்னர், வெல்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன், டீசல் மெக்கானிக், சர்வேயர் உள்ளிட்ட 15 தொழிற்பிரிவுகளில் வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த இடங்கள் - 129
பணியிடங்கள் ஒதுக்கீடு
பொதுப்பிரிவு - 55
எஸ்சி - 21
எஸ்டி - 16
ஓபிசி - 25
ஈடபிள்யூஎஸ் – 12
கல்வித் தகுதி
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) தொடர்புடைய தொழிற்பிரிவுகளில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
2016-ம் ஆண்டுக்கு முன்பாக தொழிற்பயிற்சிபெற்றவர்கள், 'இதற்கு முன்பாக வேறு எந்த நிறுவனத்திலும் வேலை பழகுநர் பயிற்சி பெறவில்லை’ என்று நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் சான்றிதழ் பெற்று, அதை சமர்ப்பிக்க வேண்டும். வயது வரம்பு (20-8-2019 அன்று) 14 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயதில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-9-2019
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்திய அரசின் வேலை பழகுநர் பணிகளுக்கான www.apprenticeship.gov.in எனும் இணையதளத்தில் `Establishment Search’ எனும் பகுதியில் `Hindustan Copper Limited, Khetri Copper Complex for undergoing training with HCL’ என்பதைத் தேர்வுசெய்து, அங்கு வழங்கப்படும் தனிப்பட்ட எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, நிறுவனத்தின் www.hindustancopper.com எனும் இணையதளத்தில் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களின் தொழிற்பயிற்சி மதிப்பெண்களுக்கு 70%, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 30% என்று மொத்தம் 100% எனக் கணக்கிட்டு, இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றி, வேலை பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பயிற்சிக்கான ஆணை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்திய அரசின் வேலை பழகுநர் சட்டத்தின் கீழான உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு: www.hindustancopper.com எனும் இணையதளத்தைப் பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சிறப்புநிலை அலுவலர்கள் பணி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் டெவலப்பர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், கிளவ்டு அட்மினிஸ்ட்ரேட்டர், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட் ஒர்க் இன்ஜினீயர், புராஜெக்ட் மேனேஜர், ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட், செக்யூரிட்டி அனலிஸ்ட் உள்ளிட்ட 35 வகையான சிறப்புநிலை அலுவலர் பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த இடங்கள் - 477
பணியிடங்கள் ஒதுக்கீடு
பொதுப்பிரிவு - 248,
எஸ்சி - 56,
எஸ்டி - 26,
ஓபிசி - 112,
ஈடபிள்யூஎஸ் – 35
தகுதி: இந்தப் பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தேவையான அடிப்படைக் கல்வித் தகுதி, கூடுதல் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் சிறப்புத் தகுதிகள் போன்றவை குறித்த விவரங்கள் வங்கி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 25-9-2019
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers எனும் இணையதளங்களில் ஒன்றில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினர், ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் - ரூ.750/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ.125/- (விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களும் அறிவிப்பில் தனியாகத் தரப்பட்டிருக்கின்றன.) தேர்ந்தெடுக்கும் முறை இந்தப் பணியிடங்களில் 1 முதல் 24 வரையிலான பணியிடங்களுக்கு இணையவழித் தேர்வு மற்றும் நேர்காணல் வழியாகவும், 25 முதல் 35 வரையிலான பணியிடங்களுக்கு, பட்டியலைக் குறைத்தல் (Shortlisting) மற்றும் நேர்காணல் வழியாகவும் உரியவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers எனும் இணைய முகவரியைப் பார்க்கலாம்..
தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனங்கள் - உதவியாளர் மற்றும் எழுத்தர் பணி
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருக்கும் உதவியாளர் / எழுத்தர் பணியிடங்கள், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்களின் வழியாக நிரப்பப்பட இருக்கின்றன.

காலிப் பணியிடங்கள்
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 238
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 162
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 119
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி – 90
தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 73
திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 68
தருமபுரி கூட்டுறவு நகர வங்கி - 7
இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 79
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 79
(மொத்தம் 915 பணியிடங்கள்)
பணியிடங்கள் ஒதுக்கீடு:
மாவட்டவாரியாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் எனக் காலி இடங்களின் எண்ணிக்கை தரப்பட்டிருக்கின்றன.
விண்ணப்பிக்க மாவட் வாரியாகக் கடைசி நாள்:
10-9-2019 முதல் 25-9-2019வரை
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மாவட்டவாரியாக கூட்டுறவு வங்கிகளின் ஆட்சேர்ப்பு மையங்களின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இந்த வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வயது வரம்பில்லை. பிற வகுப்பினர் - 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற வகுப்பைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் - 48 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற வகுப்பைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்துப் பிரிவு விதவைகள் - வயது வரம்பில்லை.
கல்வித் தகுதி:
ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் (10+2+3) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின்போது, தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிற விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்வழி.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு: மாவட்ட வாரியான கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்களின் இணையதளங்களைப் பார்வையிடலாம் அல்லது கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆட்சேர்ப்பு மைய அலுவலகத்துக்குச் சென்று விவரங்களை அறியலாம்.
இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனம் - மேல்நிலை எழுத்தர் பணி
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ், பெங்களூரை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டுவரும் இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனத்தில் (Indian Institute of Astrophysics) பெங்களூரு / கொடைக்கானல் / காவலூர் / ஹோசக்கோட் / கௌரிபிடனூர் ஆகிய அலுவலகங்களில் தலா ஓர் இடம் காலியாக இருக்கும் ஐந்து மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

பணியிடங்கள் ஒதுக்கீடு:
பொதுப்பிரிவு – 3
ஓபிசி – 1
எஸ்சி – 1
கல்வித் தகுதி: கலை / அறிவியல் / வணிகவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினிப் பயன்பாட்டில் அனுபவமுடையவராக, குறிப்பாக வேர்டு, பவர் பாயின்ட், இன்டர்நெட் மற்றும் டேலி / ஈஆர்பி போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்புக்குப் பின்னர் நிறுவனம் / நிர்வாகம் / கணக்குகள் / பண்டகசாலை மற்றும் கொள்முதல் செய்தலில் குறைந்தது மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு - 30
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-9-2019.
அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை 10-10-2019-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்த நிறுவனத்தின் https://www.iiap.res.in/iia_jobs/ எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி, பதிவுசெய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அதன் பிறகு பெங்களூரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினிப் பயன்பாட்டுத்திறன் தேர்வு நடத்தப்படும். அதன்வழியாக, தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும், கூடுதல் தகவல்களுக்கு: https://www.iiap.res.in/job.htm/?q=job_postings என்ற இணைய முகவரியைப் பார்க்கவும்.