Published:Updated:

Live ``புதிய கல்விக் கொள்கை, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
Live Update
பிரதமர் மோடி

பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்புவிழா இன்று காலை தொடங்கியது... இது தொடர்பான செய்திகளின் முக்கியத் தொகுப்பு..!

29 Jul 2022 11 AM

``புதிய கல்விக் கொள்கை, மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது!” - மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``புதிய கல்விக் கொள்கை, மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எங்கள் அரசு அதை மாற்றியது. இளைஞர்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். கட்டமைப்புத்துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் இன்று புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன” என்றார்.

29 Jul 2022 11 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தொழில்நுட்பப் பயன்பாடு இன்று பரவலாக்கப்பட்டுவருகிறது’ - பிரதமர் மோடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கிய பிரதமர் மோடி, தற்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிவருகிறார். `அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும். இந்தியாவின் இளைஞர்களை இந்த உலகமே இன்று கவனிக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் உங்களுக்குப் பெருமைப்படவேண்டியிஅ விஷயம்தான், அவரின் சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பவை. இந்திய இளைஞர்கள் மீது இந்த உலகமே நம்பிக்கை வைத்திருக்கிறது

Live ``புதிய கல்விக் கொள்கை, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது” - பிரதமர் மோடி

கடந்த ஆண்டில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது. 100 ஆண்டுகளில் வரும் ஒரு சோதனையாக கொரோனா வந்தது. மருத்துவர்கள் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரின் முயற்சிகளால் நாம் கொரோனாவிலிருந்து மீண்டோம். உணவுப்பொருள் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது” எனப் பல்வேறு துறைகளில் இந்தியாவின் சாதனைகள் குறித்துப் பேசினார்.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

மேலும், ``விவசாயிகள், இல்லத்தரசிகள், வணிகர்கள் இன்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. தொழில்நுட்பப் பயன்பாடு இன்று பரவலாக்கப்பட்டுவருகிறது” என்றார் மோடி.

29 Jul 2022 10 AM

 மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கும் பிரதமர் மோடி!

29 Jul 2022 10 AM

``கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” - ஸ்டாலின் உரை

ஸ்டாலின் உரை
ஸ்டாலின் உரை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழா காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசினார். நேற்று செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க வந்தமைக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார் ஸ்டாலின். மேலும், ``எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பிரதமரிடம் பட்டம் பெற்று பெருமையோடு எதிர்காலத்துக்கு நுழைகிறீர்கள். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத சொத்து. உங்கள் வளர்ச்சிக்கு எது தடையாக இருந்தாலும், அதைத் தகர்த்து உங்கள் இலக்கை அடையுங்கள்” என்றார்.

29 Jul 2022 10 AM

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை!

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்புவிழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சியில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் எல்.முருகன், பட்டம் பெற வந்திருக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை வரவேற்றுப் பேசினார் அமைச்சர் பொன்முடி.

Live ``புதிய கல்விக் கொள்கை, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது” - பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பொன்முடி, `` `நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொழில்முனைவோரை உருவாக்குவதுதான் கல்வியின் லட்சியம். பெண்கள் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உதவித்தொகை அறிவித்தவர் முதல்வர் என்பதைப் பிரதமருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் உறுதுணை தேவை” என்றார்.

29 Jul 2022 10 AM

விழா மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்!

Live ``புதிய கல்விக் கொள்கை, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குகிறது” - பிரதமர் மோடி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்றார். அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்றார்.

29 Jul 2022 9 AM

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. முன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கிவைத்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்புவிழா நடைபெறவிருக்கிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி பட்டமளிப்பு விழாவுக்குக் காலை பத்து மணிக்கு புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் செல்கிறார். இந்தப் பட்டமளிப்புவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

மோடி வருகையை ஒட்டி, அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் ஏழு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.