Published:Updated:

ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர் நீதிமன்றம் அதிரடி... பிரச்னை யாரிடம், எங்கே?!

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர் நீதிமன்றம் அதிரடி... பிரச்னை யாரிடம், எங்கே?!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ஆசிரியர் தகுதித் தேர்வு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009-ம் ஆண்டு கொண்டுவந்தது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையிலான வகுப்புகளைக் கையாள நியமிக்கப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான உத்தரவை 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தமிழக கல்வித்துறை பிறப்பித்தது.

இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெறவில்லை என்று கூறி, அவர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. அதை எதிர்த்து இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 7-ம் தேதி உத்தரவைப் பிறப்பித்தது. அதில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று அறிவித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அந்த சட்டவிதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மனுதாரர்கள் குறைந்தபட்சத் தகுதியைப் பெறவில்லை என்பதால், வருடாந்திர ஊதிய உயர்வைக் கோர அவர்களுக்கு உரிமையில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் தங்கள் சேவையைத் தொடர உரிமையில்லை” என்று உயர் நீதிமன்றம் கூறியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான முனைவர் பி.பேட்ரிக் ரெய்மாண்டிடம் பேசினோம். “கட்டாயக் கல்விச் சட்டம் தமிழ்நாட்டில் 2011-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால், 2009 ஆண்டு முதல் என்று முன்தேதியிட்டு அதை அமல்படுத்தினர். அதனால், 2009-க்கும் 2011-க்கும் இடைப்பட்ட காலத்தில் தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் சிறுபான்மைப் பள்ளிகளிலும் ஆசிரியர்களாகப் பலர் நியமனம் செய்யப்பட்டனர்.

2012-ம் ஆண்டுக்குப் பிறகும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தொடர்பான பிரச்னை எதுவுமில்லை. ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத்தான் இப்போது பிரச்னை. அதில், சிறுபான்மைப் பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால், அந்த ஆசிரியர்களுக்கு இதில் பிரச்னை எதுவும் இல்லை.

பேட்ரிக் ரெய்மாண்ட்
பேட்ரிக் ரெய்மாண்ட்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் பெற்று, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப் பலன்கள் கிடையாது என்ற நிலை ஏற்பட்டதால், அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே பணி நியமனம் பெற்ற எங்களுக்கு அரசாணை பொருந்தாது என்பது இந்த ஆசிரியர்களின் நிலைப்பாடு. மேலும், ‘பணி நியமனம் பெற்று பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டோம். அதனால், தகுதித் தேர்விலிருந்து எங்களுக்கு விலக்கு கொடுங்கள்’ என்று அரசிடம் அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் சுமார் 500 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் உயர் கல்வி முடித்ததற்கான ஊக்க ஊதியம் தாருங்கள் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தப் பிரச்னையில், நீதிமன்றமும் வேவ்வேறான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை அனைவரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்று ஒரு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இன்னொரு நீதிபதி, ‘அரசுப் பள்ளிகளுக்கும், சிறுபான்மைப் பள்ளிகளுக்கும் தகுதித் தேர்வு பொருந்தாது என்று எப்படி சொல்கிறீர்கள்? அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று எப்படி சொல்கிறீர்கள்... அதற்கான விவரங்களைக் கொடுங்கள்’ இன்னொரு நீதிபதி உத்தரவில் கூறியிருக்கிறார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலத்திலும் முன்தேதியிட்டு அமல்படுத்தவில்லை. பணி நியமனம் பெற்றபோது அரசாணை வெளியிடப்படவில்லை. அப்படியிருக்கும்போது, அவர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று சொல்வது நியாயமல்ல என்று கல்வித்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளிடம் முறையிட்டோம். அவர்களும், இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதாக உறுதியளித்தனர்.

ஆனால், ஆசிரியர்கள் ஒரே குரலாக ஒலிக்காமல் வேவ்வேறான நிலைப்பாடுகளில் இருப்பதால், அரசால் முடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது. இந்த ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள். எனவே, அவர்களைத் தகுதியற்றவர்கள் என்று சொல்வது சரியல்ல. மேலும் இது, அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை. பலர், ஓய்வுபெறும் வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கருத்தில் கொண்டு அரசு இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும்.

தி.மு.க அரசு எப்போதுமே ஆசிரியர்கள் மீது அக்கறையுடன் செயல்படும் அரசு. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கலாம். அதாவது, குறிப்பிட்ட தேதிவரை நியமனம் பெற்று இத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாம். அல்லது, இந்த ஆசிரியர்களுக்கென்று ஒரு சிறப்பு தேர்வை நடத்தலாம். இவர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்று அரசாணை வெளியிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். ஏற்கெனவே, கணினி ஆய்வாளர்களுக்கு ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, தற்போது அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் பேட்ரிக் ரெய்மாண்ட்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மணிமேகலையிடம் பேசியபோது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை என்ற பிரச்னையை எழுப்பினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு

“2013-ம் ஆண்டும் அதன் பிறகும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றுவரை பணி வழங்கப்படவில்லை. 2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புகூட முடிந்துவிட்டது. ஆனாலும், இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஓராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி உள்பட பல மாவட்டங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகமாக இருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் 30 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு ஆசிரியர் இருப்பால் நிறைய சிரமங்களை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவே, அந்தப் பள்ளிகளில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாமே. கொரோனா காலத்தில், தனியார் பள்ளியிலிருந்து பல லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஒரு வகுப்பில் 60-70 மாணவ - மாணவிகள் இருக்கிறார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அந்தப் பள்ளிகளில் தமிழக அரசு நியமிக்க வேண்டும்” என்றார் மணிமேகலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism