Published:Updated:

`ரெட்டை ஜடை போட்டிருந்தேன்; இப்போது இல்ல!’- சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த மருத்துவ மாணவி வேதனை

medical ( pixabay )

``உதித் சூர்யா விவகாரத்தில் அவருடைய இடத்திற்குப் பதிலாக வேறு மாணவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா?”

`ரெட்டை ஜடை போட்டிருந்தேன்; இப்போது இல்ல!’- சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த மருத்துவ மாணவி வேதனை

``உதித் சூர்யா விவகாரத்தில் அவருடைய இடத்திற்குப் பதிலாக வேறு மாணவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா?”

Published:Updated:
medical ( pixabay )

கோவை பி.எஸ்.ஜி தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் புகைப்படத்தில் மாற்றம் இருப்பதாகப் புகார் எழுந்தது. இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவத் தேர்வுக் குழு செயலாளர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் புகைப்பட சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

kilpauck medical collage
kilpauck medical collage

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணபாபு, ``பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் புகைப்படம் சற்று மாற்றமாக இருந்ததாக 22-ம் தேதி எங்களுக்குத் தகவல் வந்தது. முழுமையாக விசாரணை செய்தோம். இதில் சான்றிதழ்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களைத் தவிர்க்க வரும் காலங்களிலிருந்து பயோ மெட்ரிக் முறைகளை (finger prints) பயன்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். அதுபோல் இனிச் செயல்படுத்த உள்ளோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணை கமிட்டி (Enquiry committee) மூலம் genuine என்கிற சான்றிதழ் பெற்றுள்ளோம். இனி இரண்டு மாணவர்களும் கல்வியைத் தொடரலாம்” என்றார். அப்போது அவரிடம், ``உதித் சூர்யா விவகாரத்தில் அவருடைய இடத்திற்குப் பதிலாக வேறு மாணவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ``நீதிமன்ற தீர்ப்பு மற்றும் வழக்கின் விசாரணைக்குப் பின்னர்தான் அதை முடிவு செய்ய முடியும். இதுபோன்ற போட்டோ குழப்பங்களைத் தவிர்க்க, இனிவரும் காலம் bio metric system கொண்டு வரப்படும். இன்று நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவர்களின் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன” என்றார்.

counselling
counselling
file photo

சிவா ராம சந்துரு என்ற மாணவர் பேசுகையில், ``சான்றிதழ்களில் உள்ள புகைப்படத்தில் மாறுதல் உள்ளதாக எங்களை அழைத்து இருந்தார்கள். இன்று சான்றிதழ் மற்றும் புகைப்பட சரிபார்ப்பு நடைபெற்றது. இறுதியில் எங்களை நாளை முதல் கல்லூரிக்குச் செல்லலாம் என்று கூறியுள்ளார்கள். இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். தொடர்ந்து ஜோதிகா என்ற மாணவி, ``நான் பள்ளிப் பருவத்தில் புகைப்படம் எடுத்தபொழுது ரெட்டை ஜடை போட்டு இருந்தேன். தற்போது உள்ள புகைப்படங்களில் ரெட்டை ஜடை இல்லை என்பதற்கெல்லாம் எங்களை வரவழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்கிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism