Published:Updated:

`ஐ.ஐ.டி-யில் கல்விக்கட்டண உயர்வு இப்போது இல்லை' - மத்திய அரசு முடிவு

ஐ.ஐ.டி-யில் எம்.டெக் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவை மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் ஒத்தி வைத்துள்ளது.

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

ஐ.ஐ.டி-யில் எம்.டெக் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சம் முடிவு செய்திருந்தது.

ஐ.ஐ.டி மாணவர்கள்
ஐ.ஐ.டி மாணவர்கள்

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐ.ஐ.டியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் படிக்கிறார்கள். எனவே, இந்தக் கட்டண உயர்வு அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் எம்.டெக் படிப்புக்கான கட்டண உயர்வை தற்போது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒத்தி வைத்துள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தலைமையிலான ஐ.ஐ.டி கவுன்சில், எம்.டெக் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.

ஐ,ஐடி
ஐ,ஐடி

இந்த ஐ.ஐ.டி கவுன்சில்தான் நாட்டில் உள்ள 23 ஐ.ஐ.டி நிறுவனங்களுக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.