Published:Updated:

``பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; விரைவில் அறிவிப்பு வெளியாகும்!" - அமைச்சர் அன்பில் மகேஸ்

அமைச்சர் அன்பில் மகேஸ்

`தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

``பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; விரைவில் அறிவிப்பு வெளியாகும்!" - அமைச்சர் அன்பில் மகேஸ்

`தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published:Updated:
அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மனைவியுடன் அன்பில் மகேஸ்
மனைவியுடன் அன்பில் மகேஸ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் சீராக இயங்காததால், பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சாதிக்கயிறு கட்டுதல், பேருந்துகளில் படிகளில் தொங்கிச் செல்லுதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களின் வீடு மற்றும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கவரப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்தவுடனும் அது பிரதிபலிப்பதால் இதுமாதிரியான விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாணவர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், முதல்வர் சொன்னது போல் உங்களது கவனத்தை படிப்பில் மட்டும்தான் நீங்கள் செலுத்த வேண்டும்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

இது போன்று மாணவர்கள் நடந்து கொள்ளும்போது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்படும். அதே நேரத்தில், மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபாடாதவாறு கவுன்சிலிங் வழங்கப்படும். இதனைத் தடுப்பதற்கு முதல்வரின் ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொணரும் வகையில் ’ஊஞ்சல்’ என்ற இதழும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ’தேன் சிட்டு’ என்ற இதழும், ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ’கனவு ஆசிரியர்’ என்ற இதழும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்

அத்துடன், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணவும் முடிவு எடுக்கப்படக் கூடிய கட்டாயம் பள்ளி மேலாண்மை குழுவுக்கு உள்ளது. ஏற்கெனவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக இருந்த நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் 6 லட்சம் அதிகரித்துள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism