Published:Updated:

``பள்ளிசாரா கல்வித் திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்குக் கல்வி” - அமைச்சர் அன்பில் மகேஸ்

பயிற்சி பணிமனை விழா

பள்ளிசாரா கல்வித் திட்டத்தின்கீழ் 4.8 லட்சம் பேருக்குக் கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.

``பள்ளிசாரா கல்வித் திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்குக் கல்வி” - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிசாரா கல்வித் திட்டத்தின்கீழ் 4.8 லட்சம் பேருக்குக் கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.

Published:Updated:
பயிற்சி பணிமனை விழா

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் அடிப்படைக் கல்விச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி பணிமனை தொடக்கவிழா ஆமத்தூரிலுள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற 22 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "தமிழ்நாட்டில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு 100% பங்களிப்பின்கீழ் ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திவருகிறது.

தமிழ்நாட்டில் கல்வியையும் சுகாதாரத்தையும் இரு கண்களாக எண்ணிப் பணியாற்றிவருகிறோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக ரூ.36,895 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். 1901-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 100 பேருக்கு 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் கடந்த 2011-ல் நடந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 80.33 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 15 வயதுக்கு மேல் பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு 3.1 லட்சம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.19 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 4.8 லட்சம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது" எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.