Published:Updated:

‘ஒரு வருஷத்துல இது மரமா வளர்ந்திருக்கணும்; இல்ல... ஃபெயில் பண்ணிடுவேன்!’ - அமைச்சர் கருப்பணன் கலகல

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ‘அப்படியே அந்த ஸ்கூலுக்கு ஒரு எட்டு போயிட்டுப் போயிடுவோம்’ என அமைச்சர் ஆஜானுபாகுவாகக் கிளம்பிய போதே, காமெடி கவுன்டவுண் ஆரம்பமானது.

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன் ( ரமேஷ் கந்தசாமி )

நொய்யலாற்றில் சாயக்கழிவு நுரைத்துக்கொண்டு ஓடியபோது, ‘மக்கள் சோப்பு போட்டுக் குளிச்சதாலதான் ஆத்துல நுரை வந்துச்சி’ எனச் சொன்ன அமைச்சர் கருப்பணனைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வளவு சீரியஸான விஷயமாக இருந்தாலும், அசால்ட்டாக பதில் கொடுப்பார்.

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன்
ரமேஷ் கந்தசாமி

இந்நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா, ஆப்பக்கூடல் பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் குப்பைகளை எளிதாகச் சேகரிக்கும் வகையில் இரண்டு பேட்டரி கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேட்டரி காரில் ஏறி, வண்டியை ஆன் செய்ய முயல, அதிகாரிகள் கொடுத்த சாவி செட்டாகாமல், வரிசையாக பல சாவிகளைப் போட்டு வண்டியை ஆன் செய்ய முயற்சித்தபோதே, அமைச்சர் கொஞ்சம் டயர்டாகிப் போனார். பல சாவிகளுக்குப் பிறகு வண்டி ஸ்டார்ட் ஆகி, தெரியாமல் ஆக்ஸிலேட்டர் முறுக்கேறி வண்டி முன்னேற, அமைச்சர் பதறிப்போனார்.

பதற்றத்துடன் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்புகையில், ‘பக்கத்துல இருக்கிற ஸ்கூலுக்கு ஒரு எட்டு போயிட்டு போவோமே!’ எனச் சொல்லியிருக்கிறார். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த மரக்கன்றுகள் சில அமைச்சர் கண்ணில் பட, அவற்றை எடுத்துவர உத்தரவிட்டார். வெள்ளை வேட்டி கூட்டத்தைப் பார்த்து பதற்றத்தில் இருந்த குழந்தைகளிடம் சென்ற அமைச்சர், ‘எல்லாரும் நல்லா படிக்கிறீங்களா, இந்தாங்க இந்த மரக்கன்றுக்குக் கீழ இருக்கிற கடுதாசிய கிழிச்சி, மண்ணுல குழிபறிச்சி நட்டு, தண்ணி ஊத்தி வளர்க்கணும்.

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன்
ரமேஷ் கந்தசாமி

என்ன, சொல்றது புரியுதா? நான் ஒரு வருஷம் கழிச்சு வந்து பார்ப்பேன். மரத்தை சரியா வளர்க்கலைன்னா, ஃபெயில் போட்டுடுவேன்’ எனச் சொல்ல, சுற்றியிருந்த கூட்டம் கலகத்தது. குழந்தைகளோ மிரண்டுபோயினர்.

மரக்கன்றுகளை வாங்கிய குழந்தைகள் ஒவ்வொருவர் முகத்திலும் ஃபெயில் பண்ணிடுவாரோ என்கிற பீதி!