Published:Updated:

`என் நிஜ பெயர் திரௌபதி முர்மு இல்லை!’ - யார், எதற்காக வைத்த பெயர் அது தெரியுமா?

திரௌபதி முர்மு

``சந்தாலி பழங்குடி சமூகத்தைப் பொறுத்தவரையில், ஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரையும், பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரையும் வைப்பது வழக்கம். அதன்படி சந்தாலி முறைப்படி பெற்றோர்கள் எனக்கிட்ட பெயர் புடி (Puti).’’

`என் நிஜ பெயர் திரௌபதி முர்மு இல்லை!’ - யார், எதற்காக வைத்த பெயர் அது தெரியுமா?

``சந்தாலி பழங்குடி சமூகத்தைப் பொறுத்தவரையில், ஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரையும், பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரையும் வைப்பது வழக்கம். அதன்படி சந்தாலி முறைப்படி பெற்றோர்கள் எனக்கிட்ட பெயர் புடி (Puti).’’

Published:Updated:
திரௌபதி முர்மு

இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற புகழும், நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்று, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ளார் திரௌபதி முர்மு.

இந்நிலையில் திரௌபதி முர்மு என்பது தன்னுடைய நிஜ பெயர் அல்ல என்றும், ஆசிரியர் ஒருவரால் தன்னுடைய பெயர் மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார் நமது குடியரசுத் தலைவர் முர்மு.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ட்விட்டர்

ஒடிசாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை சில காலத்துக்கு முன்பு நேர்காணல் செய்துள்ளது. அதில் முர்மு, ``சந்தாலி பழங்குடி சமூகத்தைப் பொறுத்தவரையில் ஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரையும், பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரையும் வைப்பது வழக்கம். அதன்படி சந்தாலி முறைப்படி பெற்றோர்கள் எனக்கிட்ட பெயர் புடி (Puti).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1960-களில், பாலாசோர் மற்றும் கட்டாக் போன்ற பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்கள், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி போதிப்பது வழக்கமாக இருக்கும். அப்படி, ஒடிசாவின் மயூர்பாஞ்சை சேராத வெளிமாவட்டத்தில் இருந்து வந்த ஓர் ஆசிரியர், என்னுடைய பெயர் பிடிக்கவில்லை என்றும், எனக்கு நல்ல ஒரு பெயர் சூட்ட வேண்டும் எனவும் கூறி, மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமான `திரௌபதி’ என்ற பெயரை எனக்கு வைத்தார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

மேலும் என்னுடைய பெயர் பல தருணங்களில் மாற்றம் பெற்றுள்ளது. திரௌபதி என்ற பெயர் துர்பதி, தோர்ப்தி என மாறியது. பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள் வரை என்னுடைய துணை பெயர் துடு (Tudu) என்றே இருந்தது. வங்கி ஊழியரான ஷியாம் சரண், திருமணம் செய்துகொண்ட பிறகு முர்மு என்ற பெயரை பயன்படுத்திக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.