Published:Updated:

நாகப்பட்டினம்: ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி மறுப்பு! - தற்கொலைக்கு முயன்ற மாணவி

தனியார் பள்ளி
தனியார் பள்ளி

கடந்தாண்டு நிறைய மாணவ மாணவிகள் பள்ளிக் கட்டணத்தை பெண்டிங் வைத்திருக்கிறார்கள். அதை உடனடியாகக் கட்டச் சொல்லி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்த விரக்தியில் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்புக்கு அனுமதியில்லை
ஆன்லைன் வகுப்புக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டம், நாகூரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாகை வடகுடியில் உள்ள அமிர்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, ஆன்லைன் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் இன்றிலிருந்து, ஆன்லைன் மாதிரி தேர்வுப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், கல்வி கட்டணம் மீதமுள்ள மாணவர்கள், முழுமையாகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும் என்று பள்ளி நிர்வாகம் வாட்ஸ் அப் மூலம் அறிவித்துள்ளது. இதைப் பார்த்த அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத மன விரக்தியில் மனமுடைந்து வீட்டின் அறையில் புடவையைக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆன் லைன் வகுப்புக்கு அனுமதியில்லை
ஆன் லைன் வகுப்புக்கு அனுமதியில்லை

இது குறித்து அமிர்தா வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெய கணபதியிடம் பேசினோம். ``நாங்க கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். கடந்தாண்டு நிறைய மாணவ மாணவிகள் பள்ளிக் கட்டணத்தை பெண்டிங் வைத்திருக்கிறார்கள். அதை உடனடியாகக் கட்டச் சொல்லி மாணவர்களிடமும் பெற்றோரிடமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிக் கட்டாத மாணவர்களைத் தற்போது நடைபெறும் ஆன்லைன் வகுப்பில் சேர்க்கவில்லை. இதை மாணவர்களிடையே பேசி இருப்பார்கள் போல. ஒரு எமோஷனில் எடுக்கப்பட்ட தவறான முடிவு. தற்போது அந்த மாணவியின் தந்தை இங்கு வந்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் இதை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு