Published:Updated:

நீட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படும் மாணவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீட் தேர்வு
நீட் தேர்வு ( ஈ.ஜெ.நந்தகுமார் )

இன்று நடக்கவுள்ள நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா காரணமாக நடத்தப்படாமலிருந்த நீட் தேர்வு இன்று நடத்தப்படுகிறது. M.B.B.S , B.D.S , சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1.12 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தமுறை கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தேர்வு மையங்களில் தேர்வு எழுதக்கூடியவர்கள் N-95 முகக்கவசம் அணியவேண்டும்.

தேர்வு நடைபெறும் அறைக்குள் ஹால்டிக்கெட், 50 மி.லி சானிடைசர், தண்ணீர் தெளிவாகத் தெரியக்கூடிய வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் பிற்பகல் 1 மணியிலிருந்து 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக ஹால்டிக்கெட்டின் முதல் பக்கத்தில் கொரோனா தொடர்பாக கேட்கப்பட்ட சில விவரங்களைத் தேர்வு எழுதும் மாணவர்கள் எழுத அறிவுறுத்தபட்டுள்ளது.

ஈ.ஜெ.நந்தகுமார்
ஈ.ஜெ.நந்தகுமார்

அதில், தேர்வு நடைபெறும் நாளிற்கு முன்பான 14 நாள்களில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இருந்தனவா, கொரோனா தொற்றாளர்கள் யாருடனேனும் தொடர்பிலிருந்தனரா என்ற விவரங்களும் கேட்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 100 க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 1,12,889 பேரில் 71,745 மாணவியர், 41,144 மாணவர்கள் ஆவர். இந்த ஆண்டில் 19,867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள். சென்னையில் மட்டும் 33 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த மையங்கள் அனைத்தும் கொரேனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு