Published:Updated:

``11 பேருக்கு மட்டுமே மெடிக்கல் சீட். இதுதான் நீட் தேர்வின் வெற்றியா?!" - டாக்டர் ரவீந்திரநாத்

கு.ஆனந்தராஜ்

கல்வியாளர்கள் மற்றும் நடிகர்கள் புதிய கல்விக் கொள்கையிலிருக்கும் குறைகளை எடுத்துச் சொன்னால், அதைப் பொறுமையுடன் கேட்கும் பக்குவமும் தமிழக அரசிடம் இல்லை. பாசிச நடவடிக்கைகளைப்போலவே நடந்துகொள்கிறார்கள். 

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. 

நீட் தேர்வு
நீட் தேர்வு

அதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒருவர் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் பிடித்திருக்கிறார். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அந்த மாணவி, திருச்சியைச் சேர்ந்த கீர்த்தனா. நீட் தேர்வில் 453 மதிப்பெண் பெற்றிருந்தார் கீர்த்தனா. இவருக்குச் சுயநிதி மருத்துவக் கல்லூரியில்தான் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவர்கூட அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம்பிடிக்கவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் பெரும்பாலானோரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. ஒருவேளை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதில் சிலருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் படிக்க இடம் கிடைக்கிறது.

உண்மைத்தகவலை வெளிப்படையாகச் சொன்னால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம்பிடித்திருக்கின்றனர் என்பது தெரியவரும். இதனால் அரசுக்கும், நீட் தேர்வுக்கும் எதிரான குரல்கள் இன்னும் வலுவாக ஒலிக்கும் எனத் தமிழக அரசு நினைக்கலாம்.
டாக்டர் ரவீந்திரநாத்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 11 பேர் மட்டுமே (2017-ம் ஆண்டு 2 பேர், 2018-ம் ஆண்டு 8 பேர், இந்த ஆண்டு ஒருவர்) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்க இடம் பிடித்துள்ளனர் என்று வேதனையுடன் கூறுகின்றனர் கல்வி ஆர்வலர்கள். 

மருத்துவக் கனவுடன் அரசுப் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பலர் படித்துக்கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு அமலான பிறகு, தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிக்கையைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் குற்றச்சாட்டு. இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

``இந்தியா முழுக்க ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத்திட்டங்கள் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய கல்வி முறைதான், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரிய தடையாக இருக்கிறது. அதனால் மருத்துவப் படிப்புக்கு இந்தியா முழுக்க ஒரே பள்ளிக் கல்வி முறையை மாற்ற வேண்டும். அல்லது, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால், மத்திய, மாநில அரசுகள் அதற்குச் செவிசாய்ப்பதாக இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர் என்பது குறித்தும் தமிழக அரசு வெளிப்படையாகச் சொல்லவில்லை. 

மருத்துவ மாணவர்கள்
மருத்துவ மாணவர்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 11 மாணவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம்பிடித்திருக்கின்றனர். இதை, நமக்குக் கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் சொல்கிறோம். இது உண்மையா அல்லது பொய்யா என்பதை அரசுதானே தெளிவுபடுத்த வேண்டும்.

உண்மைத்தகவலை வெளிப்படையாகச் சொன்னால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம்பிடித்திருக்கின்றனர் என்பது தெரியவரும். இதனால் அரசுக்கும், நீட் தேர்வுக்கும் எதிரான குரல்கள் இன்னும் வலுவாக ஒலிக்கும் எனத் தமிழக அரசு நினைக்கலாம்.

`நீட் தேர்வுக்கு விலக்குக் கோரிய மசோதாவை, 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பிவிட்டோம்' என மத்திய அரசு கூறுகிறது. மத்திய, மாநில அரசுகள், நீட் தேர்வை வைத்து நாடகமாடுவது மட்டும் நன்றாகப் புரிகிறது. கல்வியாளர்கள் மற்றும் நடிகர்கள் புதிய கல்விக் கொள்கையிலிருக்கும் குறைகளை எடுத்துச் சொன்னால், அதைப் பொறுமையுடன் கேட்கும் பக்குவமும் தமிழக அரசிடம் இல்லை. பாசிச நடவடிக்கைகளைப்போலவே நடந்துகொள்கிறார்கள். 

கல்வியாளர்கள் மற்றும் நடிகர்கள் புதிய கல்விக் கொள்கையிலிருக்கும் குறைகளை எடுத்துச் சொன்னால், அதைப் பொறுமையுடன் கேட்கும் பக்குவமும் தமிழக அரசிடம் இல்லை. பாசிச நடவடிக்கைகளைப்போலவே நடந்துகொள்கிறார்கள்.
டாக்டர் ரவீந்திரநாத்

நீட் தேர்வுக்கு முந்தைய காலங்களில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த பலர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தனர். அவர்களில் பலரும் அரசு மருத்துவர்களாகச் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். தனித்திறன், கூட்டுப் பணித்திறன், நோயாளிகளிடம் நடந்துகொள்ளும்விதம், தங்களை மேம்படுத்திக்கொள்வது ஆகிய குணங்கள்தான் மருத்துவர்களை மேன்மைப்படுத்தும். தவிர, வெறும் நீட் தேர்வு மட்டுமே மருத்துவர்களை உருவாக்குவதற்கான தகுதி கிடையாது.

தற்போதைய நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களால், நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற போதிய மதிப்பெண் பெறுவதும் பெரும் சிரமமாக இருக்கிறது. இதைக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கண்கூடப் பார்த்தும்கூட, அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை. இந்நிலை தொடர்ந்தால், ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவு தகர்ந்துபோகும். அரசின் சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. ஆனால், அதிலும்கூட சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அது பொய் எனும்பட்சத்தில், அரசின் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களாவது அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்திருக்கவேண்டுமே! இனியாவது மாணவர்களின் நலனில் அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும்" என்று முடித்தார் டாக்டர் ரவீந்திரநாத்.