Published:Updated:

`பாகிஸ்தானில் பிறந்தாலும், இந்தியாதான் என் நாடு!' - ப்ளஸ் டூ தேர்வு எழுதப் போராடும் மாணவி

தமி
தமி ( ANI )

எங்கள் நாட்டில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கு வந்த எங்களின் குடும்பத்துக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுத்தது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், பாகிஸ்தானிலிருந்து அகதியாக இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானிய இந்து மாணவி ஒருவர் தன்னை 12 -ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்குமாறு ராஜஸ்தான் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு
``இந்தியா அளிக்கும் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை!'' - பாகிஸ்தான் இந்து கவுன்சில்

பாகிஸ்தான் நாட்டிலிருந்து 2015-ம் ஆண்டு அகதியாகப் புலம்பெயர்ந்து, ஜோத்பூர் அருகே உள்ள அகதி முகாமில் வசித்துவருபவர் தமி. 10-ம் வகுப்பு வரை பாகிஸ்தான் கல்வி முறையில் படித்த இவர், இந்தியா வந்தபிறகு தன்னுடைய படிப்பைத் தொடர முடியாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில், கடும் முயற்சிகளுக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்க தமிக்கு அனுமதி கிடைத்தது. அதில் தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்பு பயின்ற தமிக்கு பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தமி, ``நான் பிறந்தது பாகிஸ்தானாக இருந்தாலும், இந்தியாவை என்னுடைய நாடாக எண்ணுகிறேன். எங்கள் நாட்டில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியா வந்த எங்களின் குடும்பத்துக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது.

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வு

அகதியாக இந்தியா வந்த நேரத்தில் தங்கும் இடம், சாப்பாடு, பழக்கவழக்கம் போன்றவற்றில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், என் படிப்பு விஷயத்தில் கவனமாக இருந்தேன். இந்தியாவில் என்னுடைய கல்வியைத் தொடர அனுமதி கிடைத்தபோது, நிச்சயம் என் வாழ்வின் திருப்புமுனையாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், இன்று பொதுத்தேர்வு எழுத எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது வேதனையாக இருக்கிறது. இங்கு இருப்பவர்களை என் சகோதரர்களாக எண்ணிக் கேட்கிறேன். நான், பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்குங்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம்... என்னென்ன தீர்வுகள் சாத்தியம்?

என்னிடம் 11-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதத் தேவையான வருகைப் பதிவேடு இருந்தும் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படாதது ஏன்? இதற்கு ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து என்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் அளித்துள்ள பதிலில், `` அந்த மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பாகிஸ்தானில் எழுதியுள்ளார். அங்கு அவர் என்ன பாடத்திட்டத்தில் படித்தார் என்று பாகிஸ்தானிய வெளியுறவுத்துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம். அவர்கள் பதில் அளிக்கும்பட்சத்தில் அது இந்தியக் கல்வி முறையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, தமி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். அப்படி, இந்தியக் கல்வி முறையுடன் ஒத்துப்போகவில்லையென்றாலும், தமிக்காக விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும். தமி நிச்சயம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவார்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு