Published:Updated:

`பள்ளி மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும்!' - உச்ச நீதிமன்றத்தில் மனு

Exam (Representational Image) ( Photo by Andy Barbour from Pexels )

சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ, என்ஐஒஎஸ் மற்றும் பல ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு, நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரி கொடுக்கப்பட்ட மனுவை, நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமையன்று ஒப்புக்கொண்டது.

`பள்ளி மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும்!' - உச்ச நீதிமன்றத்தில் மனு

சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ, என்ஐஒஎஸ் மற்றும் பல ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு, நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரி கொடுக்கப்பட்ட மனுவை, நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமையன்று ஒப்புக்கொண்டது.

Published:Updated:
Exam (Representational Image) ( Photo by Andy Barbour from Pexels )

கோவிட் நோய்த் தொற்று காரணமாக நேரடி வகுப்புகளை பள்ளிகளால் நடத்த முடியவில்லை. அதனால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வை அறிவித்தது அரசு. இதனை எதிர்த்து, பொது தேர்வும் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் நேரடி தேர்வுகளுக்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து 2022-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 வகுப்புக்கான `நேரடி பொது தேர்வுகளுக்கு எதிரான மனுவை' விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ, என்ஐஒஎஸ் மற்றும் பல ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு, நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரி கொடுக்கப்பட்ட மனுவை, நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமையன்று ஒப்புக்கொண்டது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர் பிரசாந்த் பத்மநாபனால் இந்தப் பட்டியல் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, கடந்த ஆண்டு பொது தேர்வுகள் தொடர்பான மனுக்களை நீதிபதி கன்வில்கர் விசாரித்ததால், இந்த வழக்கையும் நீதிபதி கன்வில்கர் அமர்வுக்கு மாற்றினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதிமன்ற விசாரணையின்போது, `பொது தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மன அழுத்தத்தால், ஒவ்வோர் ஆண்டும் பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களுக்கும், தோல்விக்கும் பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் நேரடி தேர்வுக்குச் செல்லும்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோமோ என்ற கூடுதல் அச்சத்துடன் மாணவர்களை நேரடி தேர்வை எதிர்கொள்ள வைப்பது நியாயமற்றது மட்டுமல்ல, முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல்' என வாதிடப்பட்டது.

School Students
School Students
Anupam Nath

`மனுதாரர்களின் கோரிக்கை உண்மையானது, எனவே அரசியலமைப்பின் 14 மற்றும் 21-வது பிரிவுகளின் கீழ் கல்விக்கான மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். எனவே 10, 11, 12 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான மாற்று மதிப்பீட்டு முறை தொடர்பான அறிவிப்பை அனுப்ப, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism