Published:Updated:

`மாணவர்களுக்கு டிசி; அமைச்சருக்கு ஆலோசனை தரும் அதிகாரிகளுக்கு சமூகப்பார்வை வேணும்!' - கஜேந்திர பாபு

சட்டமன்றத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

''ஒருவேளை மாற்றுச் சான்றிதழில் மாணவரின் தவறுகளைக் குறிப்பிட்டால், இன்னொரு பள்ளிக்கூடத்தில் அவருக்கு அட்மிஷன் கொடுக்க மாட்டார்கள். உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்காது, வேலைவாய்ப்புகளும் கிடைக்காது. பாஸ்போர்ட் விண்ணப்பம் வரை பிரச்னை வரலாம். இது, குழந்தையை பழிவாங்கும் செயலாகிவிடும்.''

`மாணவர்களுக்கு டிசி; அமைச்சருக்கு ஆலோசனை தரும் அதிகாரிகளுக்கு சமூகப்பார்வை வேணும்!' - கஜேந்திர பாபு

''ஒருவேளை மாற்றுச் சான்றிதழில் மாணவரின் தவறுகளைக் குறிப்பிட்டால், இன்னொரு பள்ளிக்கூடத்தில் அவருக்கு அட்மிஷன் கொடுக்க மாட்டார்கள். உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்காது, வேலைவாய்ப்புகளும் கிடைக்காது. பாஸ்போர்ட் விண்ணப்பம் வரை பிரச்னை வரலாம். இது, குழந்தையை பழிவாங்கும் செயலாகிவிடும்.''

Published:Updated:
சட்டமன்றத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கடந்த சில நாள்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, ஆசிரியர்களிடம் அத்துமீறுவது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளை நோக்கி நகர ஆரம்பித்த பெற்றோர்களுக்கு, இத்தகைய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அரசுப் பள்ளி மாணவர்கள் (சித்திரிப்புப் படம்)
அரசுப் பள்ளி மாணவர்கள் (சித்திரிப்புப் படம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘அரசுப் பள்ளி மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்’ என்கிற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவின. ‘ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது எனச் சொல்லப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுதான், மாணவர்களுடைய இந்த ஒழுங்கீன செயல்களுக்கெல்லாம் காரணம். தவறு செய்யும் மாணவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்’ என ஆசிரியர்கள் தரப்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படியான நிலையில் இந்தப் பிரச்னைகள் சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ மாணவர்கள் தொந்தரவு தந்தால், டி.சியில் 'நடத்தை' பிரிவில் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்’ என்றதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்திற்கு சிலர் வரவேற்பு கொடுத்திருந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். “பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற குழந்தைகள் பிளஸ் டூ படித்தால் கூட, 18 வயது வரை அவர்களை குழந்தைகளாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு குழந்தை செய்கின்ற தவறுக்கும் பெரியவர்கள் செய்கின்ற தவறுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆக, தவறு செய்யும் குழந்தையை திருத்தத்தான் முயற்சி பண்ண வேண்டுமே ஒழிய, காலங் காலத்திற்கும் அந்தக் குழந்தை மீது பழியை நிரந்தமாக்கக்கூடிய வகையில் அவர் செய்த தவறை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடுவது என்பது நியாயமற்ற செயல். குழந்தைகள் ஆசிரியர்களிடம் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடிய சூழல் ஏன் உண்டானது, அந்தக் குழந்தையை எவ்வாறு சரிபடுத்த முடியும் என்கின்ற வகையில்தான் யோசிக்க வேண்டும்.

நம் வீட்டில் பிள்ளைகள் சேட்டை செய்யும்போது, ‘இது என் புள்ளையே கிடையாது’ என்று சொல்ல முடியுமா? ‘என் பையன் முரடன்’ என்று நாமே முத்திரை குத்த முடியுமா? அதேபோலத்தான் ஒரு பள்ளிக்கூடம் ஒரு மாணவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசியவர், “அப்படி ஒருவேளை மாற்றுச் சான்றிதழில் மாணவரின் தவறுகளைக் குறிப்பிட்டால், ஒட்டுமொத்தமாக அந்த மாணவருடைய வாழ்க்கையை அது பெரிதும் பாதிக்கும். இன்னொரு பள்ளிக்கூடத்தில் அந்த மாணவருக்கு அட்மிஷன் கொடுக்க மாட்டார்கள். உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்காது, வேலை வாய்ப்புகளும் கிடைக்காது. அந்த மாணவர் பாஸ்போர்ட் அப்ளை செய்வதில் இருந்து எல்லா இடத்திலும் சிக்கல் வரும். ஏனென்றால் இன்றைக்கு எல்லா இடத்திலும் மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார்கள். இது ஒரு குழந்தையை பழிவாங்கும் செயலாக மாறிவிடும்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

அதிகாரிகள் தரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்தான், அமைச்சர் இதுபோன்ற அறிவிப்புகளை மேற்கொள்கிறார். அமைச்சர்களுக்கு ஆலோசனை கொடுக்கக்கூடிய அதிகாரிகள் சற்று சமூகப் பார்வையோடு செயல்பட வேண்டும். சாதியக் கட்டமைப்புகள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடிய சமூக அமைப்பில் நாம் இருக்கிறோம். மேலும், கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிப் போய் கிடந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய பெற்றோர்களுக்கு என்ன வருமானம் இருந்தது என எதைப் பற்றியுமே கவலைப்படாமல், இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்த உடனே நேரடியாக படி என்று தான் சொல்லியிருக்கிறோம். அது எத்தகைய தாக்கத்தை அந்தக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் முழுமையாக விவாதிக்க ஆலோசனை செய்ய வேண்டும்.

மாற்றுச் சான்றிதழில் மாணவரின் தவறுகள் குறிக்கப்படும் எனச் சொன்ன அமைச்சர் அதை மறுபரிசீலனை செய்வது நல்லது. மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடுவது என்பது மாணவர் நலன் சார்ந்தது அல்ல, மாணவரை திருத்தும் முறையும் அல்ல. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்பதைப் போல, மாணவர்கள் அவ்வாறு உருவாவதற்குக் காரணம், அவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்த ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism