Published:Updated:

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்: நேரில் கலந்து கொண்ட திருமாவளவன், பிரின்ஸ் கஜேந்திரபாபு

உண்ணாவிரதப் போராட்டம்

`நீட் தேர்வை, மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வாக மட்டும் பார்க்க இயலாது. இனி அனைத்து கலை மற்றும் அறிவியல் துறைகளுக்கும் நீட் கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.' - திருமாவளவன்

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்: நேரில் கலந்து கொண்ட திருமாவளவன், பிரின்ஸ் கஜேந்திரபாபு

`நீட் தேர்வை, மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வாக மட்டும் பார்க்க இயலாது. இனி அனைத்து கலை மற்றும் அறிவியல் துறைகளுக்கும் நீட் கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.' - திருமாவளவன்

Published:Updated:
உண்ணாவிரதப் போராட்டம்

மருத்துவப் படிப்பிற்கான `நீட்' நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை தமிழகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் உக்ரைன் ரஷ்யா போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவரான நவீன் இறந்தார். அவரின் மரணத்துக்குப் பிறகு கர்நாடகாவிலும் நீட் வேண்டாம் என்ற கோரிக்கை முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியால் முன்வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான மசோதா சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது . அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பபாமலேயே திருப்பி அனுப்பினார். அதையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் எதிர்ப்பு மசோதா இயற்றப்பட்டு, அதே வாரத்தில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது . இந்த மசோதா கிடப்பில் இருக்க இந்திய மாணவர் சங்கம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் மார்ச் 9-ம் தேதி தொடங்கியது.

போராட்டம்
போராட்டம்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருமாவளவன் (வி.சி.க), கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), கே. பாலகிருஷ்ணன் (சி.பி.எம்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், அகில இந்திய விவசாயிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சம்சீர் அகமதிடம் பேசினோம். ``நீட் நுழைவுத்தேர்வு கல்வியை வணிகமயமாக்குவதற்கான முயற்சி. நீட் தேர்வு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கிறது. நீட்டுக்கு எதிரான போராட்டமானது மாணவி அனிதாவின் மரணத்திற்கு முன்பாகவே இந்திய மாணவர் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க அரசு போராடிய மாணவர்களை கைது செய்தது. அதைத் தொடர்ந்து சிறைச் சென்ற தோழர்களை சிறையில் சந்திப்போம் என்ற போராட்டமும் இந்திய மாணவர் சங்கத்தினர் முன்னெடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபோல் பல்வேறு போராட்டங்கள், குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தினோம். தற்போது நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் விரைவில் அனுப்பி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 48 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். ஆளுநர் ரவி இனிமேலும் தாமதித்தால் அவர் பதவி விலகுமாறு, தமிழகமெங்கும் இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தை நடத்தும்" என்றார் சம்சீர் அகமது.

போராட்டம்
போராட்டம்

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ``எங்கோ கிராமத்தில் ஆடு மேய்க்கும் தந்தைக்கு பிறந்து வளர்ந்த நான், இன்று ஒரு கட்சி தலைமையில் இருக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் சமூகநீதியும் கல்வியும்தான். அந்தக் கல்வியை அனைவருக்கும் சென்றடைய விடாமல் தடுப்பதற்கு வேகத்தடைகளாக நீட் போன்றவை இருக்கின்றன. நீட் தேர்வை, மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வாக மட்டும் பார்க்க இயலாது. இனி அனைத்து கலை மற்றும் அறிவியல் துறைக்கும் நீட் வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நீட் (NEET) எனும் வார்த்தையில் மருத்துவம் என்றே குறிப்பிடவல்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

நீட் எதிர்ப்பு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியும், ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலே இருக்கிறார். நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளிலிருந்து 10 பேர் கொண்ட குழு டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரில் சென்றோம். ஆனால், இயலவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக சொன்னார். ஆனால், அவரும் சந்திக்கவில்லை. இந்த நிலையில், நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த சூழ்நிலையில், நீட் எதிர்ப்பு மசோதாவை பொது உரையாடலாக ஆக்குவதற்கும், ஆளுநருக்கு அழுத்தம் தரும் விதமாகவும் இந்த 48 மணிநேர உண்ணாவிரதம் அமைகிறது" என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

போராட்டத்தில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) பேசுகையில், ``மத்தியக் கல்வி வாரியத்தாலும், மாநிலக் கல்வி வாரியத்தாலும் மாணவர்கள் தேர்வுகள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். ஆனால், இப்போது ஒரு ஏஜென்சி மதிப்பீடு செய்கிறது. இது முறையல்ல. இதை ஒன்றிய அரசு ஆதரிப்பதற்கு காரணம் நீட் பயிற்சி மையங்கள் மூலம் 18% ஜி.எஸ்.டி அரசுக்குக் கிடைக்கிறது. நீட் எதிர்ப்பு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும். மாணவர்களின் நலன் கருதி ஆளுநர் ரவி அவர்கள் மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism