Published:Updated:

சேலம் செளடேஸ்வரி கல்லூரி இனி மகளிர் கல்லூரியா? அரசு உத்தரவுக்கு வந்த எதிர்ப்பும், பதில் விளக்கமும்!

சேலம் செளடேஸ்வரி கல்லூரி

அரசு உதவி பெறும் கல்லூரியை ஆசிரியர்களின் ஆலோசனை இல்லாமல் மகளிர் கல்லூரியாக மாற்றுவது தவறு என்று ஓய்வுபெற்ற உதவி பெறும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சேலம் செளடேஸ்வரி கல்லூரி இனி மகளிர் கல்லூரியா? அரசு உத்தரவுக்கு வந்த எதிர்ப்பும், பதில் விளக்கமும்!

அரசு உதவி பெறும் கல்லூரியை ஆசிரியர்களின் ஆலோசனை இல்லாமல் மகளிர் கல்லூரியாக மாற்றுவது தவறு என்று ஓய்வுபெற்ற உதவி பெறும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Published:Updated:
சேலம் செளடேஸ்வரி கல்லூரி

சேலம், கொண்டலாம்பட்டி அருகே அமைந்துள்ளது செளடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதில் மாணவ, மாணவிகள் இருபாலரும் படித்து வருகின்றனர். சேலத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தற்போது இக்கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றியமைக்க அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது. இதனை எதிர்த்து ஒய்வுபெற்ற ஆசிரியர் சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றனர். கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜாவிடம் பேசினோம், "தமிழகத்தில் அரசு மானியம் பெறும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் 1976-ம் ஆண்டு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்திற்கு கீழ் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மகளிர் உயர்கல்வி மேம்பாடு என்ற போலியான காரணத்தைக் கூறி, இருபாலருக்குமாக இயங்கிக் கொண்டிருக்கும் செளடேஸ்வரி கல்லூரியைத் தீடீரென மகளிர் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்பது விபரீத முடிவாக உள்ளது.

கல்லூரி ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜா
கல்லூரி ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜா

ஒழுங்காற்றுச் சட்டத்தின் படி கல்லூரித் தாளாளருக்கு தனி நபராக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. இதில் முதல்வர், ஆசிரியர், அலுவலர், கல்லூரி கல்வித்துறை பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி அடங்கிய கமிட்டிக்குதான் அதிகாரம் உண்டு. கமிட்டியின் முடிவுகளை நிறைவேற்றும் பொறுப்புகள் மட்டுமே தாளாளருக்கு உரியது. இதில் கல்லூரி நிர்வாகம் ஒரு தலைபட்சமாக, ஆசிரியர்கள் ஆலோசனைகள் இல்லாமல் செயல்பட்டுள்ளது. அப்படி ஒரு வேளை மகளிர் கல்லூரியாகக் கொண்டுவந்தால் ஆண் பேராசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்படும், பெண் பேராசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இதனால் இக்கல்லூரியில் வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட ஆண் உதவி பேராசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு அரசாணையைத் திரும்ப பெறவேண்டும் என்பது எங்களது கோரிக்கை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக மண்டல கல்லூரி இணை இயக்குநர் எழிலனிடம் பேசினோம், “கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பிரச்னை போய்கொண்டிருப்பதாக கேள்விபட்டேன். நான் மண்டல இணை இயக்குநராக பொறுப்பேற்று மூன்று மாத காலம்தான் ஆகிறது. எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது. இதற்கு முன் உள்ள அதிகாரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

அவரிடம், மகளிர் கல்லூரியாக மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனச் சட்டம் இருக்கிறதா என்பது குறித்துக் கேட்டோம்.

எழிலன் மண்டல கல்லூரி இணை இயக்குநர்
எழிலன் மண்டல கல்லூரி இணை இயக்குநர்

அதற்கு அவர், "அப்படி எதுவும் இல்லை. விருப்பமுள்ள கல்லூரிகள் தெரிவித்தால், ஃபைல் சரி செய்து, மேலே அனுப்புவது மட்டும்தான் எங்களின் வேலை. இதெல்லாம் எங்களுடைய கட்டுபாட்டுக்குள் வராது. ஒரு வேளை மேல் அதிகாரிகள் ஆய்வு செய்ய சொன்னால் செய்வோம். மற்றபடி எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை" என்றார்.

ஒருவேளை மகளிர் கல்லூரியாக மாற்றினால் ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தபடமாட்டார்களா என்று கேட்டதற்கு, "அப்படி எதுவும் இல்லை. உதாரணமாக பெண்கள் கல்லூரியில் ஆண் பேராசிரியர்கள் வேலை பார்க்கும் கல்லூரிகள் சேலத்திலேயே நிறைய உண்டு. அதற்கும், கல்லூரி மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை. ஒரு முறை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், நியமிக்கப்பட்டதுதான். அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பாலாஜியிடம் பேசியபோது, “கடந்த 2 வருடமாக கல்லூரி நிர்வாகம் அரசிடம் மகளிர் கல்லூரியாக மாற்ற கோரிக்கை விடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அரசே தகுந்த ஆய்வு செய்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகள் என அனைவரும் முடிவு செய்துதான் மகளிர் கல்லூரிக்கு விருப்பமனு எழுதிப்போடப்பட்டது. யாருக்கும் தெரியாமல் எதுவும் செய்யவில்லை.

கல்லூரி முதல்வர் பாலாஜி
கல்லூரி முதல்வர் பாலாஜி

சேலம் மாநகரில் மகளிர் கல்லூரிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இயங்கி வருகின்றன. இதனால் மாணவிகள் இரண்டிலிருந்து, மூன்று பேருந்துகள் பிடித்து படிக்கச் செல்கின்றனர். பைப்பாஸின் அருகே எங்கள் கல்லூரி அமைந்திருப்பதால், மாணவிகளுக்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்று அரசே ஆய்வு செய்துதான் அனுமதித்துள்ளனர். எங்கள் கல்லூரி அரசின் கொள்கைபடி ஏழை, எளிய மாணவர்களுக்கு தகுந்த கல்வி நிறுவனமாக எப்போதும் இயங்கி வருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism