Published:Updated:

“தரமான கல்வி கிடைக்கிறது!” - அரசுப்பள்ளியில் மகனைச் சேர்த்த புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர்

அரசுப்பள்ளியில் மகனைச் சேர்த்த கல்வித்துறை இயக்குநர்

அரசுப்பள்ளியில் முன் மழலையர் வகுப்பில் தனது மகனைச் சேர்த்த புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

“தரமான கல்வி கிடைக்கிறது!” - அரசுப்பள்ளியில் மகனைச் சேர்த்த புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர்

அரசுப்பள்ளியில் முன் மழலையர் வகுப்பில் தனது மகனைச் சேர்த்த புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Published:Updated:
அரசுப்பள்ளியில் மகனைச் சேர்த்த கல்வித்துறை இயக்குநர்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியதையடுத்து படிப்படியாக பள்ளிகளும் திறக்கப்பட்டன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்பட்ட நிலையில் முன் மழலையர் வகுப்புகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே புதுச்சேரியில் நோய் தொற்று வெகு குறைவாகப் பதிவாகிவருவதால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மழலையர் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அதனடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முன் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களை ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். காலை முதல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வந்துவிட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டிருப்பதால் மழலையர் தங்களுடைய பெற்றோருடன் உற்சாகமாகப் பள்ளிக்கு வருகை தந்தனர். அதேசமயம் கதைகளைக் கூறியும், பாட்டுகள் பாடியும் ஆசிரியர்கள் குழந்தைகளின் தயக்கத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிச் சூழல் என்பதைக் காட்டாமல் விளையாட்டுக்கூடமாக வகுப்பறைகளை வடிவமைத்திருந்தது மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் லாஸ்பேட்டையில் இயங்கிவரும் அரங்கசாமி கோலக்கார நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் தனது மகன் அஸுகோஷை முன்மழலையர் வகுப்பில் இன்று சேர்த்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு. இது குறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, "மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் எங்கள் மகனைச் சேர்க்கலாம் என்று முதலில் முடிவெடுத்தோம். அதற்குக் காரணம் பணிமாறுதல் பெற்று வெவ்வேறு பிராந்தியங்களுக்குச் செல்லும்போது அது சிரமமில்லாமல் இருக்கும்.

ஆனால் இந்த வருடம் கேந்திர வித்யாலயாவில் சேர்க்க முடியவில்லை. அதனால் வேறு பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தோம். கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்திருப்பதால் முன் மழலையர் வகுப்புகளை இன்று திறக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தேன். அதனடிப்படையில் என் மகனையும் பள்ளியில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தேன். அதன்படி எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் வந்து சேர்த்திருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகப் பாடம் சொல்லித் தருகிறார்கள். தரமான கல்வியும் கிடைக்கிறது. எங்கள் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism