Published:Updated:

புதுச்சேரி: `சென்டாக் விண்ணப்பத்துக்குக் கட்டணம் இலவசம்’ - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கு நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள், இளநிலை கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் நுண்கலைகள் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் தொடங்கியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள், இளநிலை கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் நுண்கலைகள் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் முறையை கல்வித்துறை வளாகத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 31-ம் தேதி அதற்கான கடைசி நாள். www.centacpuducherry.in என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவக் கல்விக்கான சேர்க்கைகள் குறித்த விவரங்கள் நீட் தேர்வு நடந்த பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்டாக் விண்ணப்பங்களுக்கான கட்டணம் இலவசம்.

`சென்டாக் வழக்கு; ரூ.5 கோடி கட்டுமான ஊழல்!'-புதுச்சேரி சி.பி.ஐ கிளையின் பின்னணியை விவரித்த கிரண்பேடி

மொத்தமுள்ள 8,167 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். சென்டாக் தொடர்பான சந்தேகங்களுக்கு www.centacpuducherry.in என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம். கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியிலும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு