Published:Updated:

`மதிய உணவில் எலி... ஒரு பாக்கெட் பாலுக்கு ஒரு வாளி தண்ணீர்!’ - உத்தரப்பிரதேச மதிய உணவு அவலம்

பழங்குடியினர் பகுதியான இந்த இடத்தில், அரசு அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலில் கலப்படம் செய்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மதிய உணவில் எலி
மதிய உணவில் எலி

மதிய உணவின் சுகாதாரமற்ற நிலைபற்றி சமீபத்தில் அதிகமாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில், கடந்த வாரம் செவ்வாயன்று பரிமாரப்பட்ட மதிய உணவில், இறந்த எலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம், முசஃபர்பாத் பசேந்தாவில் உள்ள ஜனதா இன்டர் காலேஜ் அரசுப் பள்ளியில் நடந்துள்ளது.

`மதிய உணவில் எலி... ஒரு பாக்கெட் பாலுக்கு ஒரு வாளி தண்ணீர்!’ - உத்தரப்பிரதேச மதிய உணவு அவலம்

உணவில் எலி கண்டெடுக்கப்படும் முன்பே, அந்த உணவை உண்ட மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சுமார் ஒன்பது மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த உணவு 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உணவு, ஹபூரைச் சேர்ந்த ஜன் கல்யாண் சன்ஸ்தா கமிட்டி எனும் நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகும்.

சமீபத்தில்தான், அதே மாநிலத்தில் உள்ள ஸோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து 85 மாணவர்களுக்குத் தரப்பட்டது பெரும் பூதாகரமானது. பழங்குடியினர் பகுதியான இந்த இடத்தில், அரசு அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலில் கலப்படம் செய்தது நாடு முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அம்மாவட்டத்தின் அரசு ஊழியர்களோ, போதுமான அளவு பால் கிடைக்கவில்லை... அதனால்தான் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதை தண்ணீரில் கலந்ததாகக் கூறினர்.

பால்
பால்

"எங்களுக்கு வழங்கப்பட்ட பாலில் தண்ணீர்தான் கலக்கப்பட்டது“ என்கிறார் அப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜா. "கிட்டத்தட்ட 85 குழந்தைகளுக்கு, ஒரே ஒரு பாக்கெட் பால் மட்டுமே இருந்தது. மேலதிகாரிதான், தண்ணீரை கலக்கச் சொன்னார். அதன் பிறகு, ஒரு வாளி நிரம்பியது. பால் கொதித்த பிறகு சூடாக பரிமாறப்பட்டது" என்கிறார் அங்கு பணிபுரியும் ஒரு பெண் ஊழியர்.

Vikatan

இவை மட்டுமல்ல, அதே மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, மதிய உணவாக சப்பாத்தியும் உப்பும் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், உத்தரப்பிரதேச மதிய உணவுத்துறையின் வலைதளத்தில், மாணவர்களுக்கு தினமும் காய்கறி, பழங்கள், பால் மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.