Published:Updated:

``கல்லூரித் தேர்வுகளைவிட சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஈசி’’ - நம்பிக்கையூட்டும் ரவி ஐபிஎஸ்

ரவி ஐபிஎஸ்
ரவி ஐபிஎஸ்

தேர்வுகள் குறித்த பதற்றம், பயம் உள்ளிட்டவற்றை தூக்கிப்போடுங்கள்...

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால், அனைவருக்குமே சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம், விடா முயற்சி இவை அனைத்தும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடத்த உள்ளன.

Representational Image
Representational Image

ஐ.ஏ.எஸ், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்க உள்ளனர். இந்நிகழ்வு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் 2020, மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 2.00 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஐ.ஏ.எஸ் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்குப் புதிய வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வு பற்றிய புரிந்துணர்வைக் கொடுக்கும்.

IAS, TNPSC தேர்வுகள் பற்றிய இந்தக் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் ரவி ஐ.பி.எஸ் அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார். அத்துடன், போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர்- இயக்குநர் சிவராஜவேல் ஆகியோர் ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர்.

``கல்லூரித் தேர்வுகளைவிட சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஈசி’’ -  நம்பிக்கையூட்டும் ரவி ஐபிஎஸ்

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால்போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

இந்நிகழ்வு குறித்து பேசிய, காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் ரவி ஐ.பி.எஸ், ``என் அன்பார்ந்த மாணவர்களே... ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு நீங்கள் தயார் செய்வதற்கு, கல்லூரித் தேர்வுகளுக்கு தயார் செய்வதைவிட சுலபமான வழிமுறைகள் உள்ளன. எனவே, தேர்வுகள் குறித்த பதற்றம், பயம் உள்ளிட்டவற்றை தூக்கிப் போடுங்கள். தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். பல லட்சம் பேர் எழுதும் பெரிய பெரிய தேர்வுகள் என்ற பயமும் வேண்டாம். எப்படித் தயார் செய்வது என்பதற்கு ஒருசில எளிமையான வழிமுறைகள் உள்ளன. அதாவது, சில ட்ரிக்ஸ் உள்ளன. முதலில் தேர்வின் இயல்பைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

என்ன தேர்வு எழுதப் போகிறோம் என்ற புரிதல் அவசியம். மேலும், ``நான் கணக்கு பாடத்தில் வீக், ஆங்கிலம் தெரியாது’’ போன்ற புலம்பல்களை விட்டுவிடுங்கள். உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் போதும். மேலும், தேர்வுக்குத் தயார் ஆவதற்கான ட்ரிக்ஸை தெரிந்துகொள்ளுங்கள். எளிமையான வழியில் பாடத்திட்டங்களைப் படிப்பது எப்படி என்பது குறித்து திருச்சியில் நடைபெறும் ஆலோசனை முகாமில் உரையாட உள்ளேன். பங்குபெற்று பயன்பெறுங்கள்’’ என்றார்.

மார்ச் 1-ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சியின் ஆன்லைன் முன்பதிவுக்கான கூகுள் படிவத்தின் லிங்க்... https://forms.gle/1KkpBC21eg7fTrKJ9
அடுத்த கட்டுரைக்கு