Published:Updated:

``இந்த தடவையும் பாஸ் ஆகலைன்னா!" - நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை
நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை ( representational image )

‘இந்த தடவையும் நான் நீட் எக்ஸாம்ல பாஸ் ஆகலைன்னா, என்னோட டாக்டர் கனவை நான் மறந்துட வேண்டியதுதான்!’ என நேற்று மாலை அவரது நண்பர்களைச் சந்தித்தபோது வருத்தத்துடன் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் 1,12,889 மாணவர்கள் இன்றைக்கு நீட் தேர்வினை எழுத உள்ளனர். இதற்கிடையில், நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த சேலம் மாவட்டம், கூளையூரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எக்ஸாமுக்கு நல்லா படிச்சிருக்கேன். நிச்சயமா இந்த தடவை நான் பாஸ் ஆயிடுவேன். ஆனாலும், கொஞ்சம் பயமா இருக்கு’ என பெற்றோரிடமும் நேற்றிரவு லேசாக வருத்தப்பட்டிருக்கிறார் தனுஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கூளையூரைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் - சிவஜோதி தம்பதியர். இவர்களுடைய இளைய மகன் தனுஷ் (19). 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்ற தனுஷ், மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்துள்ளார். இதற்காக இரண்டு முறை நீட் தேர்வு எழுதியவர் இரண்டு முறையுமே தோல்வியடைந்திருக்கிறார். ‘இந்த முறை நிச்சயமாக நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவேன்’ என தனுஷ் தீவிரமாகப் படித்து வந்துள்ளார். மேட்டூரை அடுத்த மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு எழுத தனுஷிற்கு ஹால் டிக்கெட்டும் வந்திருக்கிறது. ‘இந்த தடவையும் நான் நீட் எக்ஸாம்ல பாஸ் ஆகலைன்னா, என்னோட டாக்டர் கனவை நான் மறந்துட வேண்டியது தான்!’ என நேற்று மாலை அவரது நண்பர்களை சந்தித்தபோது வருத்தத்துடன் பேசியுள்ளார். ‘எக்ஸாமுக்கு நல்லா படிச்சிருக்கேன். நிச்சயமா இந்த தடவை நான் பாஸ் ஆயிடுவேன். ஆனாலும், கொஞ்சம் பயமா இருக்கு’ என பெற்றோரிடமும் நேற்றிரவு லேசாக வருத்தப்பட்டிருக்கிறார்.

Suicide Prevention (Representational Image)
Suicide Prevention (Representational Image)
Image by Daniel Reche from Pixabay
Vikatan

நீட் தேர்வுக்கு பயந்து நள்ளிரவு வரை தனுஷ் அவருடைய அறையில் படித்துக் கொண்டிருந்துள்ளார். அவருடைய பெற்றோர்கள் தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். விடியற்காலை 5 மணியளவில் தாயார் சிவஜோதி சென்று பார்க்கையில், தனுஷ் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். மகன் தூக்கிட்டுக் கிடப்பதைப் பார்த்து பெற்றோர் கதறியழுதுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கருமலைக்கூடல் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், அந்தத் தேர்வில் பங்கேற்க இருந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூளையூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு