Published:Updated:

`விளிம்பு நிலை குழந்தைகளை முன்னேற்ற வேண்டும்!'- எடுத்துக்காட்டாகும் சேலம் `முன்னோடி' இளைஞர்கள்

நாகேந்திரன்
நாகேந்திரன் ( எம். விஜயகுமார் )

``இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை என்ற சமத்துவ நிலை உருவாக வேண்டும். என்பதே எங்கள் அனைவரின் ஆசை''

``நாம் கற்ற கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் இச்சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும், அவர்களின் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கும் பயன்பட வேண்டும்'' என்கின்றனர் சேலம் சாஃப்ட்வேர் இளைஞர்கள்.

அரசு பள்ளி
அரசு பள்ளி
எம். விஜயகுமார்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 14,000 மதிப்புடைய கணினியை இலவசமாக வழங்கி முன்னோடி இளைஞர்கள் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்கள் சேலம் சாஃப்ட்வேட் இன்ஜினீரியங் இளைஞர்கள்.

இதுபற்றி சேலம் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் இளைஞர் நாகேந்திரன், ``நாங்க பெரிய வசதியானவர்கள் கிடையாது. ஏழை நடுத்தர குடும்பத்தில் பிறந்து படித்து முன்னுக்கு வந்திருக்கிறோம். நாம் கற்ற கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் இச்சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கும் பயன்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இந்தச் சிந்தனையால் சேலம் சாஃப்ட்வேர் இன்ஜினீரியரிங் இளைஞர்கள் 10 பேர் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மரம் நடுதல், அரசுப் பள்ளி ஆய்வுக்கூடங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தும் வருகிறோம்.

அரசு  பள்ளி
அரசு பள்ளி
எம். விஜயகுமார்

ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சாஃப்ட்வேர் வசதியோடு கணினி இல்லை என்ற தகவலை தலைமை ஆசிரியர் விஜயராகவன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் மூலம் தெரிந்துகொண்டோம்.

அதையடுத்து, இன்ஜினீயர் இளைஞர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் தொகை போட்டு 14,000 மதிப்புடைய கணினியை வாங்கிக்கொடுத்தோம். இந்தக் கணினியைப் பயன்படுத்தி குழந்தைகள் எங்களைப்போல முன்னுக்கு வந்து பலருக்கும் உதவ வேண்டும். இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை என்ற சமத்துவ நிலை உருவாக வேண்டும். என்பதே எங்கள் அனைவரின் ஆசை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு