Published:Updated:

`போட்டியிட்ட 4 பதவிகளிலும் தோல்வி!' - ஏ.பி.வி.பி-க்கு ஷாக் கொடுத்த காங்கிரஸின் என்.எஸ்.யூ.ஐ

பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

என்.எஸ்.யூ.ஐ
என்.எஸ்.யூ.ஐ

அகில பாரத இந்து சபா நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவால் தோற்றுவிக்கப்பட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சாதிய, மத வேறுபாடுகள் தலைவிரித்தாடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துவருகின்றன. சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றிய ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் சம்ஸ்கிருதத் துறைக்கு ஃபெரோஸ்கான் என்பவர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகம்
சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகம்

இவர், சம்ஸ்கிருத மொழியில் பிஹெச்.டி படித்தவர். பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்து பல்கலைக்கழகத்தில் ஃபபிரோஸ்கானுக்குப் பணி வழங்கப்பட்டது. ஆனால், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் தங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது என, சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவரணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏ.பி.வி.பிதான். இந்த அமைப்புமீது சமீபத்தில் டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

`படிப்பை நிறுத்திவிட்டு வரச் சொல்கிறார்கள்!’ -ஜே.என்.யூ தாக்குதலால் கலங்கும் வெளிநாட்டு மாணவர்கள்

இதற்கிடையே ஏ.பி.வி.பி மாணவர் சங்கத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய செய்தி நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4 பதவிகளைக் கொண்ட இந்தத் தேர்தலில் ஏ.பி.வி.பி ஓர் அணியாகவும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியான என்.எஸ்.யூ.ஐ (National Students' Union of India) ஓர் அணியாகவும் போட்டியிட்டன.

என்.எஸ்.யூ.ஐ
என்.எஸ்.யூ.ஐ

இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள 4 பதவிகளில் ஒரு பதவியைக்கூட ஏ.பி.வி.பி அமைப்பால் வெல்ல முடியவில்லை. அதுவும் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் ஏ.பி.வி.பி தோல்வி அடைந்துள்ளது.

`நாம் பயப்படவில்லை என்பதில் பெருமைகொள்கிறேன்’ - ஜே.என்.யூ போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன்

பல்கலைக்கழகத்தின் மாணவர் அணித் தலைவருக்கு போட்டியிட்ட ஏ.பி.வி.பி-யின் ஹர்ஷித் பாண்டே பெற்றது 224 வாக்குகள்தான். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சிவம் சுக்லா 709 வாக்குகள் பெற்று மாணவர் அணித் தலைவர் ஆகியுள்ளார். மேலும், என்.எஸ்.யூ.ஐ-யைச் சேர்ந்த சந்தன் குமார் மிஸ்ரா துணைத் தலைவராகவும் அவ்னிஷ் பாண்டே பொதுச் செயலாளர் இடத்தையும் ரஜினிகாந்த் துபே நூலகர் பதவியையும் பெற்றுள்ளனர்.

என்.எஸ்.யூ.ஐ
என்.எஸ்.யூ.ஐ

என்.எஸ்.யூ.ஐ-யைவிட ஏ.பி.வி.பி குறைந்த அளவு வாக்குகளே கைப்பற்றியுள்ளது. அதிலும் ஒரு மாணவர் 21வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் ஏ.பி.வி.பி அமைப்பின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு பெற்றுள்ள தோல்வி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என்.யூ முகமூடித் தாக்குதல்... யார் காரணம்?