Published:Updated:

கற்றனைத் தூறும் அறிவு: புதிய கல்விக்கொள்கை, கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களை கீழே தள்ளிவிடும்!

புதிய கல்விக்கொள்கை
பிரீமியம் ஸ்டோரி
புதிய கல்விக்கொள்கை

தங்கம் தென்னரசு, தமிழக பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர்

கற்றனைத் தூறும் அறிவு: புதிய கல்விக்கொள்கை, கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களை கீழே தள்ளிவிடும்!

தங்கம் தென்னரசு, தமிழக பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர்

Published:Updated:
புதிய கல்விக்கொள்கை
பிரீமியம் ஸ்டோரி
புதிய கல்விக்கொள்கை

ல்வித் துறையில் மத்திய அரசின் திட்டங் களுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சியடைந்த மாநிலங்களை கஸ்தூரி ரங்கனின் புதிய கல்விக்கொள்கை அறிக்கை ஏணிப்படியிலிருந்து கீழே தள்ளிவிடுகிறது.

கற்றனைத் தூறும் அறிவு: புதிய கல்விக்கொள்கை,
கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களை கீழே தள்ளிவிடும்!

இந்தியாவில் தமிழகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களும்... கோவா, லட்சத்தீவு மற்றும் சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் ஏற்கெனவே கல்வியில் வளர்ச்சியடைந்தவை. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்கள், கல்வியில் மிகவும் பின்தங்கியவை. பல்வேறு கலாசாரங்கள், மொழி, சுற்றுச்சூழல், சமூக, பொருளாதாரப் பின்னணிகளைக்கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய நம் தேசத்தில், ஒரே கல்விக்கொள்கை என்பதே அபத்தமானது. அப்படி இருக்கும்போது தமிழகம் போன்ற கல்வித் துறையில் பல படிகள் முன்னேறிய மாநிலங்களுக்கும் பீகாரைப் போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கும் ஒரே கல்விக்கொள்கை என்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி என இரண்டு பிரிவுகளாக புதிய கல்விக்கொள்கை வரைவு தயார் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டையும் மறு ஒழுங்கு செய்வதுதான் புதிய வரைவின் அடிப்படை. ஆனாலும் மறு ஒழுங்கு தேவையா, அது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்கிற கேள்விகள் முதன்மையாக எழுகின்றன. மாநில அளவிலான மறு ஒழுங்கு எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தியது எனப் பார்க்க வேண்டும். பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் இருந்த நிலையில், ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்களைப் பின்பற்றின. அவற்றுக்கான மதிப்பெண் அளவுகோல் களும் வெவ்வேறாக இருந்தன.

மற்றொரு பக்கம் பொருளாதாரரீதியாக முன்னேறிய நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு கல்வியும், பின்தங்கியவர்களுக்கு வேறு வகையிலான கல்வியும் என, கல்விப் பிரிவினை இருந்தது.

நோக்கம்: பயன்தரத்தக்க ஒழுங்குமுறை மற்றும் அங்கீகரிப்பு முறைகளால், இந்திய பள்ளிக்கல்வி முறை பலப்படுத்தப்படுகிறது. அது தொடர்ச்சியாக கல்வி முறைப் பலன்களை அதிகரிக்கச் செய்வதற்காக, கல்விமுறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, உயர்ந்த தரம் மற்றும் புதுமை ஆகியவற்றை உறுதிசெய்கிறது.

இது களையப்பட்டு, அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி தரப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் தமிழகத்தில் சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தோம். ஆனால், எங்களுக்கு அடுத்து வந்த அ.தி.மு.க அரசு, சமச்சீர் கல்வியை மறுத்தது. பிறகு, நாங்கள் நீதிமன்றம் வரை சென்று சமச்சீர் கல்விக்கான உரிமையை நிலைநாட்டினோம். ஆனாலும், சமச்சீர் கல்வி இன்று வரை ஏட்டளவில் மட்டும்தான் இருக்கிறது.

அடுத்து, சமச்சீர் கல்வி கூடாது என்பதற்காகவே பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதாக அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதன்படி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு பாடத்துக்கான சுமை ஏற்றப்பட்டது. மேலே செல்லச் செல்ல ஒவ்வொரு வகுப்புக்கும் இடையிலான பாடத்திட்டத்தில் சீரற்ற கற்றல்தன்மை (Non-gradient) புகுத்தப்பட்டது. இது, மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை அதிகரித்தது. கேட்டால், ‘போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்செய்வதற்காக இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தோம்’ என்றார்கள். அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட பாடத்திட்டத்திலும் அத்தனை பிழைகள்!

கற்றனைத் தூறும் அறிவு: புதிய கல்விக்கொள்கை,
கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களை கீழே தள்ளிவிடும்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவருக்கு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என புதிய திட்டம் அமலுக்கு வந்தது. 11-ம் வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் குறைந்ததும், அந்தப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பெறாவிட்டாலும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று கூறப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்காக 11-ம் வகுப்புப் பாடத்திலேயே இளங்கலை அறிவியல் பாடத்தைப் புகுத்தினார்கள். அதனால் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பிலேயே இடைநிற்றல்கள் அதிகமாகின. சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இப்படியான இடைநிற்றல்கள் அரங்கேறின. நிலைமை இப்படி படுமோசமாக இருக்க, இதுபற்றியெல்லாம் ஆராயாமல் கூடுதல் சுமையாக நீட் தேர்வுக்கான மாணவர் பயிற்சி கையேடுகள் தனியே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மாநில அளவில் பள்ளிக்கல்வியில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கு மாநில அளவிலேயே மறு ஒழுங்கு நடவடிக்கை தேவை. ஆனால், இதைப் பற்றியெல்லாம் புதிய கல்விக்கொள்கையில் எதுவும் சொல்லப்படவில்லை.

கல்வி கற்றல் என்பது, நீட்சியான ஒரு செயல். அதை வெறுமனே தேர்வுகளில் மட்டுமே சுருக்குவது, மாணவர்களின் மீதான வன்முறை. பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை, புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் நலனைவிட தேர்வுகளைப் பற்றித்தான் பக்கத்துக்குப் பக்கம் பேசுகிறது.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை மட்டுமே அதன் பிரச்னையில்லை. மூன்றாம் வகுப்பு தொடங்கி பல கட்டங்களாக பொதுத்தேர்வு போன்றதொரு முறைமையைக் கையாள்வது பற்றி கொள்கை பேசுகிறது. கிட்டத்தட்ட `11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு’ என்று தமிழக அரசு அறிவித்த கதைதான் இதுவும். வெற்றி, தோல்வி, தேர்ச்சிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால், தேர்வு நடைபெறும். 11-ம் வகுப்பு மாணவர்களாலேயே சமாளிக்க முடியாததை, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் எப்படிக் கையாள்வர்? எட்டாம் வகுப்பு மாணவர், தனக்கான தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை பேசுகிறது. பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவத்தில் அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று திணிப்பது வன்முறை. மூன்றாம் வகுப்பில் தொடங்கும் தேர்வுமுறைகள், மருத்துவப் படிப்பில் எக்ஸிட் தேர்வு வரை விரிகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம்... `இடஒதுக்கீட்டை, இந்தத் தேர்வுகள் பாதிக்காது’ என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. கல்வி வாய்ப்பற்றப் பகுதிகளில் வாழும் பிள்ளைகளுக்கு மேல்நிலைப் பள்ளிக்கல்விக்கான வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. எப்படியோ போராடி 11-ம் வகுப்பு வரை வரும் அந்தப் பிள்ளைகளுக்கு எடுத்த எடுப்பிலேயே இளங்கலை அறிவியல் பாடத்தை நடத்தினால், அது மேலும் அயர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். அப்போது கல்வியை வெறுத்து அவர்கள் இடைநிற்க வாய்ப்பு உருவாகும். இதனால், இடஒதுக்கீடு கொடுத்த வாய்ப்பை இடைநிற்றல் பறித்துவிடும் அபாயமும் இருக்கிறது.

கல்வி கற்றல் என்பது, நீட்சியான ஒரு செயல். அதை வெறுமனே தேர்வுகளில் மட்டுமே சுருக்குவது மாணவர்களின் மீதான வன்முறை. பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை, புதிய கல்விக்கொள்கை, மாணவர் களின் நலனைவிட, தேர்வுகளைப் பற்றித்தான் பக்கத்துக்குப் பக்கம் பேசுகிறது. நாம் நடத்துவது கல்வித் துறையா... தேர்வுத் துறையா?

இந்த வருடத்தின் தமிழக பாடநூல் ஒன்றில், காவி நிற முண்டாசு அணிந்த பாரதியாரை அட்டைப்படமாக வைத்திருந் தார்கள். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மாநில அரசு எது மாதிரியாக செவிசாய்க்கக் கூடும் என்பதற்கு காவி நிற முண்டாசு அணிந்த பாரதி ஓர் உதாரணம். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. நமது தேவை, கல்வி என்னும் மாநில உரிமை... காவி முண்டாசு அணிந்த பாரதி அல்ல!