Published:Updated:

`காரணமே சொல்லப்படாத 5 தற்கொலைகள்!' -சென்னை ஐ.ஐ.டி முன்பு கொந்தளித்த மாணவர்கள்

மாணவி ஃபாத்திமா தற்கொலையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

`காரணமே சொல்லப்படாத 5 தற்கொலைகள்!' -சென்னை ஐ.ஐ.டி முன்பு கொந்தளித்த மாணவர்கள்

மாணவி ஃபாத்திமா தற்கொலையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

Published:Updated:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் (ஐ.ஐ.டி) சேர்ந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப், தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஐ.டி-யில் இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.gh

ஐ.ஐ.டி வளாகம்
ஐ.ஐ.டி வளாகம்

மாணவியின் பெற்றோர் கேரளா முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அப்போது, ``எங்கள் மகள் ஃபாத்திமா 'தன்னுடைய தற்கொலைக்கு மூன்று பேராசிரியர்கள்தாம் காரணம்' என செல்போனில் பதிவு செய்துள்ளார். நிர்வாகமும் காவல்துறையும் சொல்வதைப்போல அவளின் தற்கொலைக்கு மதிப்பெண் குறைந்தது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நுழைவுத் தேர்விலும் அதற்கு முந்தைய தேர்வுகளிலும் எங்கள் மகள்தான் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அதையும் தாண்டிய வேறு அழுத்தங்கள்தான் அவளின் மரணத்துக்குக் காரணமாக இருக்கும். காவல்துறை இந்த விசாரணையை மூடிமறைக்கப் பார்க்கிறது, இதில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், இன்று ஐ.ஐ.டி முன்பு ஃபாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: ``மாணவி ஃபாத்திமா தற்கொலையில் சந்தேகத்துக்கு இடமில்லாத நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஐ.ஐ.டி மெட்ராஸில் இந்த ஆண்டு மட்டும் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதுவரை எந்தத் தற்கொலைகளிலும் இதுதான் காரணம் என நிர்வாகத்தால் தெரிவிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர், மாணவியின் மீது பாகுபாடு காட்டியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

காவல் ஆணையர் விஸ்வநாதன்
காவல் ஆணையர் விஸ்வநாதன்

அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டியில் நடைபெற்ற அனைத்துத் தற்கொலைச் சம்பவங்கள் பற்றியும் ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்திட வேண்டும். பட்டியல், சிறுபான்மை சமூக மாணவர்கள்தாம் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய ஐ.ஐ.டி-க்குள் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் தற்கொலைச் சம்பவங்களைக் கையாள்வதற்கான உரிய வழிமுறைகளையும், கல்வி நிலையங்களில் பாகுபாடுகளை முற்றிலும் ஒழிப்பதற்கான செயல்திட்டமும் உருவாக்க வேண்டும். மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இன்று ஐ.ஐ.டியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பி மெகாலினா இந்த வழக்கின் விசாரணையில் முக்கியப் பங்கு வகிப்பார். இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மூத்த காவல்துறை அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகே எதுவும் தெரிவிக்க முடியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism