Published:Updated:

`யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு உதவும் `Space Learning' டெக்னிக்!'- கல்வியாளரின் அட்வைஸ்

ஆலோசனை முகாம்
ஆலோசனை முகாம்

``படிக்கிறோம்...! இருந்தாலும், ஃபெயில் ஆகுறோம்...! என்று நினைக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற பல டிப்ஸ்களை வழங்கக் காத்திருக்கிறேன்!" என்கிறார், எஸ்.சிவராஜவேல்.

தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் சரியான முறையில் கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம், விடா முயற்சி என அனைத்தும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவுக்குக் கைகொடுக்கும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடத்த உள்ளன.

தேர்வு
தேர்வு
pixabay

யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு வழிகாட்டும் நிகழ்வு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் 2020, மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 2.00 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஐ.ஏ.எஸ் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்குப் புதிய வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வு பற்றிய புரிந்துணர்வை கொடுக்கும்.

இந்தக் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர்.ரவி ஐ.பி.எஸ் அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார். அத்துடன், போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர்.சங்கர சரவணன், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர்- இயக்குநர் சிவராஜவேல் ஆகியோர் ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர்.

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால்போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுகளோடு பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் எஸ்.சிவராஜவேல் சில சொல்லும் சில டிப்ஸ்கள்...

* தினமும் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கம் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற உதவியாக இருக்கும்.

* யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு என்.சி.இ.ஆர்.டி-யின் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள அறிவியல் மற்றும் சமூக அறிவியல் புத்தகங்களை படிக்க வேண்டும். இதன்மூலம், அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

* கடந்த 20 வருட வினாத்தாள்களைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் படிக்கும்போது ஃபில்டர் செய்ய முடியும்.

எஸ்.சிவராஜவேல்
எஸ்.சிவராஜவேல்

* இரண்டு தேர்வுகளின் பாடத்திட்டங்களையும் மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் படிப்பதில் கூர்மையாக இருக்க முடியும்.

* என்ன படிக்கிறோம் என்பதைப்போல எப்படி படிக்கிறோம் என்பதும் மிக முக்கியம். படிக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உட்கார்ந்து ஒரேயடியாகப் படிக்காமல், படிப்பதற்கு இடையில் இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது, செல்ஃபோனைப் பயன்படுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

``படிக்கிறோம்...! இருந்தாலும், ஃபெயில் ஆகுறோம்...! என்று நினைக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற பல டிப்ஸ்களை வழங்கக் காத்திருக்கிறேன்!" என்றும் பேசினார்.

மார்ச் 1ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சியின் ஆன்லைன் முன்பதிவுக்கான கூகுள் படிவத்தின் லிங்க்... https://forms.gle/1KkpBC21eg7fTrKJ9
அடுத்த கட்டுரைக்கு