Published:Updated:

`ஐ.ஏ.எஸ் தேர்வில் ஜெயிக்கும் ஃபார்முலா தெரிய வேண்டுமா?!’- சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவன இயக்குநர்

சிவராஜவேல்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

`ஐ.ஏ.எஸ் தேர்வில் ஜெயிக்கும் ஃபார்முலா தெரிய வேண்டுமா?!’- சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவன இயக்குநர்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

Published:Updated:
சிவராஜவேல்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்தி வருகிறது. திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கிளை விரித்துள்ள இந்த அகாடமி, ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்கள் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வும், வழிகாட்டலும் ஏற்படுத்திவருகிறது.

அந்தவகையில், ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இலவச ஆலோசனை முகாம் ஒன்றினை திருச்சியில் நடத்தவிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவது எப்படி, சிவில் சர்வீஸ் தேர்வு நுணுக்கங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன?.. என்பது குறித்தும், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த ஆலோசனை முகாமில் விடையளிக்க இருக்கின்றனர்.

நிகழ்ச்சி அழைப்பிதழ்
நிகழ்ச்சி அழைப்பிதழ்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஜூலை 31 (ஞாயிறு) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனை முகாம் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஐ.ஏ.எஸ் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.

சிவராஜவேல்
சிவராஜவேல்

இந்த முகாம் குறித்து சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவன இயக்குநர் எஸ்.சிவராஜவேல் பேசும்போது, “2011-ல் ஆரம்பிக்கப்பட்ட சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த மாணவர்களில் இதுவரை 450 பேர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 1400 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய 3 இடங்களில் எங்களுடைய சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இருக்கிறது. எங்களுடைய அகாடமியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட கவனம் கொடுத்து யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயார்படுத்தி வருகிறோம். நாங்கள் நடத்துகின்ற தேர்வுகளில் மாணவர் ஏதாவது ஒரு பாடத்தில் பின் தங்கியிருப்பது தெரியவந்தால், அவருக்கு தனியாக ஒரு ஆசிரியரை வைத்து கூடுதலான வகுப்புகள் மற்றும் ஆலோசனைகள் கொடுக்கிறோம். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி, உறுதியாய் எழுத வேண்டும் என உத்வேகப்படுத்துவதற்காக அடிக்கடி மோட்டிவேஷன் வகுப்புகள் கொடுக்கிறோம். அதில் எங்களுடைய அகாடமியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுமே வந்து அவர்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து செல்கிறார்கள்.

திருச்சியில் நடைபெறவிருக்கின்ற ஆலோசனை முகாமில், ஐ.ஏ.எஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளைப் பற்றி 360 டிகிரி கோணத்தில் தகவல்களை வழங்க இருக்கிறோம். மாணவர்களுடைய ஐயப்பாடுகளை களைவதோடு, தேர்வுகள் குறித்தான தெளிவையும், தேர்வில் ஜெயிப்பதற்கான சூட்சுமங்களையும் சொல்லவிருக்கிறோம் - சிவராஜவேல்

சோசியாலஜி விருப்பப்பாடத்தில் இந்திய அளவில் கடந்த 11 வருடங்களாக எங்களுடைய மாணவர்கள் தான் அகில இந்திய அளவில் அதிகமான மார்க் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அதேபோல கடந்த 6 வருஷமாக டாப் ரேங்க் வாங்கக்கூடியவர்கள் எங்களுடைய மாணவர்கள்தான். சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் 2-வது ரேங்க் மற்றும் 4-வது ரேங்க் எங்களுடைய மாணவர்தான். அந்த மாணவர்கள் இருவருமே திருச்சியில் நடைபெறவிருக்கின்ற ஆலோசனை முகாமிற்கு வரவிருக்கிறார்கள். அதேபோல, சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் திருச்சி நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் சிறப்பு விருந்திரனான திருச்சி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதனே 2016-ல் எங்கள் அகாடமியில் பயின்று வெற்றி பெற்ற மாணவர் தன். அதேபோல பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் சரண்யா, திருவண்ணாமலை எஸ்.பியாக இருக்கக்கூடிய டாக்டர் கார்த்திகேயன் மற்றும் கோயமுத்தூர் எஸ்.பி பத்ரி நாராயணன் போன்ற பலரும் எங்களுடைய அகாடமியில் பயின்றவர்கள் தான். திருச்சியில் நடைபெறவிருக்கின்ற ஆலோசனை முகாமில், ஐஏஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளைப் பற்றி 360 டிகிரி கோணத்தில் தகவல்களை வழங்க இருக்கிறோம். மாணவர்களுடைய ஐயப்பாடுகளை களைவதோடு, தேர்வுகள் குறித்தான தெளிவையும், தேர்வில் ஜெயிப்பதற்கான சூட்சுமங்களையும் சொல்லவிருக்கிறோம்” என்றார்.

இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. இலவசம் தான். ஆனால், கலந்துகொள்பவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவு செய்ய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்