Published:Updated:

`சிறப்பு பேருந்து... தனிமனித இடைவெளி; சுகாதாரம்’-நாளை தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி

social disatncing paper correction hall
social disatncing paper correction hall

சமூக இடைவெளியைக் கடைபிடிக்க, ஒரு வகுப்பறைக்கு ஒரு முதன்மைத் தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவித் தேர்வாளர்கள் என 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சமயத்தில், 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைகூட ஏற்பட்டது.11-ம் வகுப்புக்கு இன்னும் ஒரு தேர்வு நடத்தவேண்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

excam
excam

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகளுடனும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் மாநிலம் முழுவதும் 200 மையங்களில் நாளை முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

ஊரடங்கு காலத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படுவதால், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வந்துசெல்ல ஏதுவாக, சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

excam
excam

நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர், எடக்காடு, கோத்தகிரி, குன்னூர், எருமாடு, பாட்டவயல் ஆகிய 6 பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சமூக இடைவெளியைக் கடைபித்தும் சுகாதார பாதுகாப்புடனும்‌ பேருந்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் மதிப்பீட்டு மையங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும், ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி தெளித்திடவும், பிளீச்சிங் பவுடர், சானிடைஸர் மூலம் கழிவறைகளை நான்கு முறை சுத்தம் செய்யவும், அனைத்து வகையான தொடர் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

officilas visit
officilas visit

அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மற்றும் கை கழுவும் திரவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க ஒரு வகுப்பறைக்கு ஒரு முதன்மை தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவித் தேர்வாளர்கள் என 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியைப் பொறுத்தவரை ஊட்டியில் உள்ள நீலகிரி நாசரத் கான்வென்ட் மற்றும் பெத்லகேம் பெண்கள் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில், மேல்நிலை வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை, 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தப் பணியில் 45 முதன்மை தேர்வாளர்கள், 45 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 270 உதவி தேர்வாளர்கள் மற்றும் 30 அலுவலகப் பணியாளர்கள் என மொத்தம் 390 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு கட்டுப்பாடுகளுடன் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற உள்ளது.

social disatncing paper correction hall
social disatncing paper correction hall

இந்த மையங்களில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கண்காணித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு