Published:Updated:

கைகள் இல்லாத மாணவி ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி - தன்னம்பிக்கைக்கு குவியும் பாராட்டுகள்!

தேர்வில் பங்கேற்ற மாணவி

இரண்டு கைகள் இல்லாத நிலையில், சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி லட்சுமி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

கைகள் இல்லாத மாணவி ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி - தன்னம்பிக்கைக்கு குவியும் பாராட்டுகள்!

இரண்டு கைகள் இல்லாத நிலையில், சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி லட்சுமி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

Published:Updated:
தேர்வில் பங்கேற்ற மாணவி

மயிலாடுதுறையில், இரண்டு கைகள் இல்லாத பெண், சிறுவயதிலேயே தாய் தந்தையரால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவு இல்லத்தில் வளர்ந்து, தற்போது நம்பிக்கையுடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று தன்னம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழ்கிறார். அவரது வெற்றி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மாணவி லெட்சுமி
மாணவி லெட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகம் முழுவதும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகள், கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில், இரண்டு வயது குழந்தையாக இருந்ததில் இருந்து தற்போது வரை அங்கேயே வளர்ந்து வருகிறார் லெட்சுமி.

சாதித்த மாணவிக்கு இனிப்பூட்டும் தோழி.
சாதித்த மாணவிக்கு இனிப்பூட்டும் தோழி.

இரண்டு கைகள் இல்லாத நிலையில், சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி லெட்சுமி, இத்தேர்வில் 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவியை, காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ மாணவியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர். ``தோல்வியுறும் மாணவ - மாணவியிர் லெட்சுமி தேர்ச்சி பெற்றிருப்பதை உதாரணமாகக் கொள்ள வேண்டும். அவரின் வெற்றி பாராட்டுக்குரியது" என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism