Published:Updated:

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 மாதத்திட்டம் - தகுதி பெற்றவர்கள் யார்... யார்?!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 மாதத்திட்டம் - தகுதி பெற்றவர்கள் யார்... யார்?!

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Published:Updated:
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டு முதலே திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரவிருப்பதால், தகுதியான மாணவிகளிடமிருந்து சான்றிதழ்களைப் பெற அனைத்து கல்லூரிகளுக்கும் உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வரும் ஜூலை 15-ம் நாள் தொடங்கிவைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் 2022-23
தமிழக பட்ஜெட் 2022-23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம்:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தி.மு.க அரசு ஆட்சிப்பொறுபேற்ற பிறகு தாக்கல்செய்யப்பட்ட முதல் முழு பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக, உயர் கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில், உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்', `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம், `மாணவிகள் உயர் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டார் .

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மாதம் ரூ.1,000 பெறும் மாணவிகளுக்கான தகுதிகள்:

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ரூபாய் பெறும் கல்லூரி மாணவிகள் அனைவரும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும். அதன்பிறகு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு என கல்லூரிப் படிப்பை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும், இந்த மாணவிகள் ஏற்கெனவே மற்ற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்தத் திட்டத்தின்கீழ் பலன் பெறலாம், அவர்களுக்கு இந்த உதவித்தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும், இதற்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போது முதல் நடைமுறைக்கு?

அரசுப் பள்ளிகளில் (6-12) பள்ளிப் படிப்பை படித்து, கலை அறிவியல், பொறியியல், வேளாண், கால்நடை உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்; நடப்பு கல்வியாண்டு முதலே இதை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கடந்த ஏப்ரல் மாதம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

பொன்முடி
பொன்முடி

அதை உறுதிசெய்யும் விதமாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ``மாணவிகளின் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. மாணவிகளுக்கான உயர் கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் உதவித்தொகை வழங்கப்படும்" என கடந்த மாதம் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை

உயர்கல்வித்துறை சுற்றறிக்கை:

இந்த நிலையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்குத் தகுதியான மாணவிகளிடருந்து சான்றிதழ்களை பெற அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில், ``கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை கல்லூரி முதல்வர்கள் பெற வேண்டும். முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும். இந்த தகவல்கள் சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காமராசர் பிறந்தநாள்:

இந்த நிலையில், கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் காமராசர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அரசு பள்ளி மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும்படி கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism