Published:Updated:

பள்ளிகள் திறப்பு: `25 மாணவர்களுக்கு மிகாமல்..!’-ஜனவரி 19-ம் தேதி முதல் 10, 12 வகுப்புகள் தொடங்கும்!

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு

மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இடையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று அனுமதி வழங்கி, பிறகு எதிர்ப்புகளால் மீண்டும் அந்த அனுமதியை நாள் குறிப்பிடாமல் தள்ளிப்போட்டது அரசு. பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், பொங்கல் விடுமுறைகள் முடிந்து வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கச் சம்மதம் தெரிவித்ததாகத் தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பள்ளிகள் அனைத்தும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி வகுப்புகளை நடத்தலாம் என்றும், ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

`சுகாதாரத்துறை அனுமதி கிடைத்ததா?’ - பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் கொதிக்கும்   கல்வியாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு