Published:Updated:

வேலூர்: கொரோனா பேட்ச் மாணவன் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த விவகாரம் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி

கொரோனா பேட்ச் மாணவன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்ற நிலையில், மீண்டும் 10-ம் வகுப்பிலேயே ஓராண்டு படித்திருக்கிறார். இந்த விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் 2 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வேலூர்: கொரோனா பேட்ச் மாணவன் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த விவகாரம் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கொரோனா பேட்ச் மாணவன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்ற நிலையில், மீண்டும் 10-ம் வகுப்பிலேயே ஓராண்டு படித்திருக்கிறார். இந்த விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் 2 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 491 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 17 ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். 100 சதவிகிதம் கிராமப்புற மாணவர்கள் மட்டுமே படிக்கும், இந்தப் பள்ளியில் வளத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற கூலித்தொழிலாளியின் மகன் கணேசன், கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்துள்ளான். அது, கொரோனா காலம் என்பதால் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதில், மாணவன் கணேசனும் ஒருவன்.

தேர்ச்சி சான்றிதழ்
தேர்ச்சி சான்றிதழ்

ஆனால், இந்த கல்வியாண்டில் கணேசன் பதினொன்றாம் வகுப்பு சேராமல், இரண்டாவது முறையாக 10-ம் வகுப்பிலேயே இருந்துள்ளான். கணேசனுடன் படித்த சக மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து படித்துவரும் நிலையில், இந்த மாணவனை மட்டும் எப்படி பத்தாம் வகுப்பிலேயே தொடர்ந்து படிக்க ஆசிரியர்கள் அனுமதித்தார்கள் என்ற கேள்விக்குத்தான் யாரிடமும் விடையில்லை. அந்த அளவுக்கு ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். மாணவன் தரப்பிலும் அவனது பெற்றோர்கூட காரணம் கேட்காமல் விட்டது ஏன்? என்பதும் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் பள்ளிக்கு வந்துள்ளது. ஹால் டிக்கெட்டை சரிபார்த்தபோதுதான் மாணவன் கணேசன் கடந்த கல்வி ஆண்டிலேயே தேர்ச்சி பெற்றது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. ‘தம்பி நீ போன வருஷமே பாஸ் ஆகிட்ட. நீ வீட்டுக்குப் போகலாம்’ என ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். இதைக்கேட்ட மாணவன் அதிர்ச்சியடைந்துள்ளான். ஆசிரியர்களின் அலட்சியப் போக்கால், அந்த மாணவனின் ஓராண்டு கல்வி வீணானது குறித்து பலத் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டன.

வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி
வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி

இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விசாரணை நடத்தி வந்தார். மாணவனுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு, 11-ம் வகுப்பில் சேரவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த மாணவன் ஐ.டி.ஐ-யில் சேர விரும்புவதாகக் கூறி சான்றிதழைப் பெற்றுச்சென்றார். இந்த நிலையில், மாணவனின் ஓராண்டுக் கல்வியை வீணடித்த புகாரில், பணியில் கவனக்குறைவாக இருந்த வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமியிடம் கேட்டபோது, ``இந்த தவறு நடக்கும்போது பொறுப்பிலிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய இரண்டுப் பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். மேலும், 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘போன ஆண்டு இதே மாணவன் பத்தாம் வகுப்பு படித்தானே... மீண்டும் ஏன் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பிலேயே அவன் இருக்கிறான்’ என்ற யோசனை ஏன் அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு வரவில்லை என்ற கேள்விதான் என்னுள்ளும் எழுகிறது. ஆசிரியர்களாவது கண்டுபிடித்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களாவது சந்தேகம் எழுப்பியிருக்க வேண்டும். மாணவனின் பெற்றோராவது கேள்விக் கேட்டிருக்க வேண்டும். ஒரே குழப்பமாக இருக்கிறது. மாணவன் பதினொன்றாம் வகுப்பை தொடர உதவி செய்வதாகவும் கூறினேன். அவனது பெற்றோர் ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டனர்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism