Published:Updated:

தற்கொலைக்குத் தூண்டியதாகப் போராட்டம்; காரில் 36 லேப்டாப்!-தலைமை ஆசிரியையைத் தடுத்து நிறுத்திய மக்கள்

36 மடிக்கணினிகள்
News
36 மடிக்கணினிகள்

மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 'தலைமை ஆசிரியைமீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்' என காவல்துறையினர் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆசிரியரைத் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை முயற்சிக்குத் தூண்டியதாகக் கூறி, தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி ஆசிரியர்கள்  உள்ளிருப்புப் போராட்டம் செய்துவருகின்றனர். இந்த வேளையில், தலைமை ஆசிரியர் தனது காரில் 36 அரசு மடிக்கணினிகளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றதாகத் தடுத்து நிறுத்தி பெற்றோர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

36 மடிக்கணினிகள்
36 மடிக்கணினிகள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,084 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கடந்த 7-ம் தேதி அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா, ஆசிரியர் செந்தில் என்பவரை மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியிலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார் ஆசிரியர் செந்தில். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது நலமுடன்  வீடு திரும்பியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர். புகார்மீது நடவடிக்கை எடுக்கப்படாததோடு, தலைமை ஆசிரியர்  சித்ரா மீண்டும் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிக்கு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த 20 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நடுவே தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியைவிட்டு வெளியேற முயன்றபோது, பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் காரை வழிமறித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது, கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கவேண்டிய 36 மடிக்கணினிகள் அந்த காரில் இருந்ததால், பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தின் வாசல் கதவை அடைத்துப் பூட்டினர். தகவலறிந்து வந்த பாலையூர் காவல் ஆய்வாளர்  விசித்ராமேரியும், போலீஸாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசிரியர் தற்கொலை முயற்சி
ஆசிரியர் தற்கொலை முயற்சி

மடிக்கணினிகள் திரும்பப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டன. மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு  'தலைமை ஆசிரியைமீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்' என காவல்துறையினர் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலைந்து சென்றனர்.