Published:Updated:

``புதிய கல்விக் கொள்கை... பாடத்திட்டத்தில் கீதை, வேதங்கள்!" - உத்தரகாண்ட் கல்வியமைச்சர்

உத்தரகாண்ட் கல்வியமைச்சர் தன் சிங் ராவத்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் இருக்கும் என, உத்தரகண்ட் கல்வியமைச்சர் தன் சிங் ராவத் இரு கூறியுள்ளார்.

மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு இன்றுவரை பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. அதிலும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருக்கும் மும்மொழிக் கொள்கையானது, இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில், இந்தியைத் திணிக்கும் விதமாக உள்ளது என கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சமீபத்தில், இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை, இந்தித் திணிப்பு எனக் கூறி பல மாநிலங்கள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரகாண்டில் இந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளதாக, அந்த மாநில கல்வியமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்திருக்கிறார்.

உத்தரகாண்ட் கல்வியமைச்சர் தன் சிங் ராவத்
உத்தரகாண்ட் கல்வியமைச்சர் தன் சிங் ராவத்

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடத்தில் பேசிய தன் சிங் ராவத், ``வரும் சட்டப்பேரவை அமர்வில், இந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவுள்ளோம். இதன்மூலம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும். அதுமட்டுமல்லாமல், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து, வேதங்கள், கீதை, ராமாயணம், உத்தரகாண்ட் வரலாறு ஆகியவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்ப்போம். மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் உள்ளவற்றில் 30% முதல் 40% சதவிகிதம் வரை மாநிலங்களே தேர்வு செய்யலாம் என்றும் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது" எனக் கூறினார்.

பா.ஜ.க ஆளும் இதே உத்தரகாண்டில், பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிக்க, வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism