Published:Updated:

திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் - பின்னணி என்ன?

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மீதான முறைகேடு புகார்களை விசாரணை நடத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் - பின்னணி என்ன?

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மீதான முறைகேடு புகார்களை விசாரணை நடத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர் மாவட்டம், சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கடந்த 2002-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 128-க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களாக சுசீலா திருமாறன், எல்.கண்ணன், ஜோதிமுருகன், குணசேகரன், க.முருகன் ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து வரவு, செலவுக் கணக்குகள் கடந்த 2018-ம் ஆண்டு உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறையின் வேலூர் மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கை செய்யப்பட்டன.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

இதில், வரவு, செலவுக் கணக்கு தணிக்கையில் 2002-03 முதல் 2015-16-ம் ஆண்டு வரை ரூ.116,67,51,478 கணக்கில் வராமல் இருப்பதாகப் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன் ஊழல் புகார் எழுப்பினார். அதேபோல, தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படாத வகையில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் கடந்த 2018-ம் ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து பல்கலைக்கழக வரவு, செலவு கணக்குகள் மீது விரிவான ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை உயர்கல்வித்துறை நியமித்துள்ளது.

அரசாணை
அரசாணை
அரசாணை
அரசாணை

இது குறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில், "திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு ஒப்பந்தம் கோருவதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் பேராசிரியர் இளங்கோவன் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் எஸ்.மலர்விழி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒப்பந்தம், தற்காலிகப் பேராசிரியர், பணியாளர் ஆகியோர் நியமனத்தில் முறைகேடு போன்ற விவகாரங்கள் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும். அதன்படி, மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கையைத் தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

"திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ஊற்றெடுக்கிறது. துணைவேந்தரும் பதிவாளரும் வானத்திலிருந்து குதித்தவர்களைப்போல் மமதையில் இருக்கிறார்கள். பொதுமக்களைத் திரட்டி, ஊழலைச் சந்தி சிரிக்கவைப்பேன்’’ என்று 2019-ம் ஆண்டு ஆவேசமாகக் கூறியிருந்தார் அப்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன்.

அதன்படி, பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் முக்கிய பணியாற்றியதாகக் கூறப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism