Published:Updated:

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு; எதிர்த்து தனி தீர்மானம் நிறைவேற்றிய ஸ்டாலின்!

நுழைவுத் தேர்வு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனி தீர்மானத்தை தாக்கல் செய்தார். மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல்போல வளர மட்டுமே இது சாதகமாக அமையும் எனத் தெரிவித்தார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு; எதிர்த்து தனி தீர்மானம் நிறைவேற்றிய ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனி தீர்மானத்தை தாக்கல் செய்தார். மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல்போல வளர மட்டுமே இது சாதகமாக அமையும் எனத் தெரிவித்தார்.

Published:Updated:
நுழைவுத் தேர்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு இனி12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனவும், 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக தேசிய தேர்வு முகமையால் (NTA National Testing Agency) நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET - The Common University Entrance Test) தேர்ச்சிபெற வேண்டும் எனவும், முதன்முறையாக இந்தத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது யுஜிசி.

யுஜிசி
யுஜிசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனி தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின், 'ப்ளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது யுஜிசி. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT - The National Council of Educational Research and Training) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு நுழைவுத் தேர்வும், மாநிலப் பாடத்திட்டங்களைப் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கிடாது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மாநில பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலையில் இருப்பவர்கள். எனவே NCERT பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதவற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நுழைவுத் தேர்வும் நீட் தேர்வை போன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளியின் நீண்டகால கற்றல் முறையை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்கள் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழலையும் ஏற்படுத்திவிடும்.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல்போல வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என தமிழக மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில், நடக்கவிருக்கும் பொது பல்கலைக்கழகத் தேர்வினை ரத்து செய்ய ஒன்றிய அரசை, பேரவை வலியுறுத்துவதாக தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism