Published:Updated:

“நாட்டை வழிநடத்திச் செல்லும் அனைத்து தகுதிகளையும் தமிழகம் கொண்டிருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

கடந்த ஆண்டு நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு ஒரே மேடையில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வு என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது அணுகப்பட்டது.

“நாட்டை வழிநடத்திச் செல்லும் அனைத்து தகுதிகளையும் தமிழகம் கொண்டிருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த ஆண்டு நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு ஒரே மேடையில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வு என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது அணுகப்பட்டது.

Published:Updated:
சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி நிகழ்வுக்குத் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி விழாவில் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

நீட் தேர்வு விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது, ஊட்டியில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தியது உள்ளிட்ட செயல்பாடுகளால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதனால், தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் வைத்த தேநீர் விருந்தைத் தமிழக அரசு புறக்கணித்தது; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புறக்கணித்தனர். இந்தப் பின்னணியில், கடந்த ஆண்டு நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு ஒரே மேடையில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வு என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது அணுகப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ம் ஆண்டுப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 931 பேரில் நேரில் பட்டம் பெற்றனர்; அவர்களில் 731 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். தமிழ், பொருளாதாரம் எனப் பல்வேறு பிரிவுகளில் எம்.எஸ்.சண்முகம், மகேஸ்வரி உள்ளிட்ட ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், 2011-16 அ.தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தாவரவியலிலும் முனைவர் பட்டம் பெற்றனர்.

சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

“முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் ஏழை மாணவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள் ஆகியோர் இலவசமாக உயர்கல்வி பெறும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2010-ம் ஆண்டு முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-23 கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலைகளில் இலவசமான கல்வி அளிக்கப்படும் என்பதும்; அனைவருக்கும் சமமான சமூகநீதி என்ற தமிழ்நாடு அரசின் உயரிய திராவிட நோக்கத்தை உயர்கல்வியில் நிறைவுசெய்யும் வகையில் இளநிலை பயிலும் மாணவர்களுக்குச் சமூகநீதி மற்றும் திருக்குறள் காட்டும் தொழில்நிலை ஆகியவை விருப்பப் பாடமாக இடம்பெற உள்ளது என்பதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று விழா சிறப்புரை ஆற்றினார் முதல்வர் ஸ்டாலின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், “இடைநிற்றலைத் தவிர்த்து பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில், உதவித் தொகை திட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கல்லூரியில் சேர்ந்து படிப்பு முடியும் வரையில் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. காமராஜரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலம் போல, கலைஞரின் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம் போல, எனது தலைமையிலான காலம் உயர்கல்வியின் பொற்காலமாக ஆகவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

“பிரதமர் மோடி தமிழின் தொன்மையைப் பறைசாற்றி வருகிறார். தமிழ் இன்னும் சென்றடையாத இடங்களுக்குத் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாகச் சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன். நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும். கல்வி, சுகாதாரம், தொழில்துறை என பல அம்சங்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது; நாட்டை வழிநடத்திச் செல்லும் அனைத்து தகுதிகளையும் தமிழகம் கொண்டிருக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியை விடவும் தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன,” என்று பேசிய ஆளுநர், “உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த் நல்வாழ்த்துகள்” என்று தமிழில் கூறி உரையை நிறைவு செய்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

முன்னதாகப் பேசிய இணைவேந்தரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, “கல்வியையும் சுகாதாரத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் உயர்கல்வியில் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி

தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்குத்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவிசெய்கின்றன. இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களுக்குப் பலன் அளிப்பதில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி என்பது மாநில உரிமையாக இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி நன்றாக வளரும்,” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism