Published:Updated:

``உலகிலேயே தலைசிறந்த மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து உருவாக வேண்டும்!" - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

``உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்கவே `நான் முதல்வன்' என்கிற திட்டத்தை தொடங்கியிருக்கிறேன்." - தனியார் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

``உலகிலேயே தலைசிறந்த மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து உருவாக வேண்டும்!" - முதல்வர் ஸ்டாலின்

``உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்கவே `நான் முதல்வன்' என்கிற திட்டத்தை தொடங்கியிருக்கிறேன்." - தனியார் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

சென்னை பையனூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகமான `சாய்' பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், ``தமிழ்நாட்டில், உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த அரசு உயர்கல்வியில் முதலிலிருந்தே மிகுந்த கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு தேசிய உயர்கல்வி மாணவர் சேர்க்கை, 27.1 விழுக்காட்டைவிட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை முழுவதும் கலைஞரைத்தான் சேரும். அதனால்தான், நேற்று சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்புவிழாவில் நான் பேசுகிறபோது, `பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்றால், கல்லூரிக் கல்விக்கு கலைஞர்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அந்த வகையில் உயர்கல்விக்கு இந்தக் காலம் பொற்காலமாக இருக்கும் என்று நேற்றைக்கு அங்கு வலியுறுத்திப் பேசியிருக்கிறேன். இப்போது அதை இங்கே மீண்டும் நான் வலியுறுத்துகிறேன். உயர்கல்வியில் அகில இந்திய மாணவ சேர்க்கையைத் தாண்டி, தமிழகம் முன்னணியில் நிற்பதற்குப் பல காரணிகள் உண்டு. இருந்தாலும் தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், ஆராய்ச்சித்துறையில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்கவே `நான் முதல்வன்’ என்கிற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். மாணவர்களின் திறமைகளை அதிகரித்து, தமிழக மாணவர்கள் சாதனைகள் நிகழ்த்தக்கூடியவர்களாக மாற வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். நாம் உயர்கல்வியில் சிறந்த மாணவர்களாக ஆவோம், உயர்கல்விக்குப் பொற்காலத்தை உருவாக்குவோம் என்று கூறி புதிதாகக் கற்க வரக்கூடிய மாணவர்களுக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism