Published:Updated:

`ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி!' - கல்வித் தொலைக்காட்சி சர்ச்சை

வழக்கு தாக்கல் செய்த பின் நீக்கிய அரசு.

மதுரை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை
மதுரை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

ஊழல் வழக்கு உள்ள அமலன் ஜெரோமை கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளராக கல்வித்துறை நியமித்திருந்த நிலையில், தமிழ் வழிக்கல்விக்காக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் அருண் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இது பற்றி மனுச்செய்த பின், அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி தொலைக்காட்சி
கல்வி தொலைக்காட்சி

அருணுக்காக ஆஜரான வழக்கறிஞர் நீலமேகத்திடம் பேசினோம், ``ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு தொடங்கியுள்ள கல்வித் தொலைக்காட்சியில் ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல புகார்கள் உள்ளன.

கடந்த கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காக கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பாடங்களுடன் சி.டி. தயாரிக்கும் பணி, அமலன் ஜெரோமின் மனைவி நடத்தி வரும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இவர்கள் கல்வித்துறையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி இந்த வீடியோவை ஊடகங்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் வருமானம் பார்த்தார்கள்.

உயர் நீத்யிமன்றம் மதுரைக்கிளை
உயர் நீத்யிமன்றம் மதுரைக்கிளை

இந்தப் புகாரில் அமலன் ஜெரோம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அப்படி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்ட அமலன் ஜெரோமை கல்வித் தொலைக்காட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பது சட்ட விரோதம். அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் மனுச்செய்திருந்தோம். அப்போது அரசுத் தரப்பில் நீதிபதிகள் விளக்கம் கேட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், ஊழல் புகாரின் காரணமாக அமலன் ஜெரோம் கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து கடந்த 7-ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்'' என்று அதற்கான உத்தரவை நீதிபதிகளிடம் காட்டினார்கள். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், `லஞ்ச ஒழிப்புத்துறை, அமலன் ஜெரோம் மீதான ஊழல் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்கள். இந்த வழக்கு வரவில்லை என்றால் ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் தொடர்ந்து பொறுப்பில் இருந்திருப்பார். கல்வித்துறையில் இதுபோன்ற இன்னும் சிலர் இருக்கின்றனர். பல கோடி மோசடி நடந்து வருகிறது'' என்றார்.

கல்வி தொலைக்காட்சி
கல்வி தொலைக்காட்சி

கடந்த ஜனவரி மாதம் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளியின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கவும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் வழிக் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆடியோ வீடியோ தயாரிக்கும் பணிக்கு தமிழக கல்வித்துறை ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதியில் பெரிய அளவில் மோசடி செய்ததாக வந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆதாரங்கள் சிக்கின.

அப்போது அவருடன் சேர்த்து இடைநிலை ஆசிரியர் அமலன் ஜெரோம், முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குநர் லதா, உதவிப் பேராசிரியை சங்கீதா, ஆசிரியை சித்ரா ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது

உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

அப்படி ஊழல் வழக்கில் சிக்கியவரைத்தான் கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறார்கள். `கல்வித்துறையில் எந்த மாதிரியான நபர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள் என்பதற்கு அமலன் ஜெரோம் ஒரு உதாரணம்' என்கிறார்கள் ஆசிரியர்கள்.